சங்க இலக்கியம்- அறிந்ததும் அறியாததும்
Virtualமூவாயிரமாண்டுத்தொடர்ச்சியும் இலக்கியவளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலமெனச் சொல்லப்படும் சங்ககாலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்கள், தமிழினத்தின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பினையும் தமிழினம் கடைபிடித்த சிறந்த நாகரிக வாழ்க்கை முறையையும் நமக்குப் பறைசாற்றுவதோடு, மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, கலை, பண்பாட்டுக்கூறுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் அரிய சான்றாகவும் விளங்குகின்றன. அத்தகைய சிறப்புமிகு சங்க இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்ட தமிழறிஞர் மதிப்புக்குரிய வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், டிசம்பர் மாத இலக்கியக் கூட்டத்தில் " சங்க இலக்கியம்- அறிந்ததும் அறியாததும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.