பேரவை சட்டதிட்ட மாற்றங்கள் ஏற்பு அறிவிப்பு!

வணக்கம்,.

பேரவையின் சட்டதிட்ட சீராய்வுக்குழு பரிந்துரைத்திருந்த மாற்றங்கள், பல கலந்துரையாடல் கூட்டங்கள் வாயிலாகவும், பற்பல செயற்குழுக் கூட்டங்களிலும் தீர விவாதிக்கப்பட்டு, பேராளர்கள் மற்றும் வாழ்நாள் உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டது என்பது யாவரும் அறிந்த ஒன்றே. புதிய சட்ட திட்டங்கள் உடனடியாக (ஏப்ரல் 15, 2022) அமலுக்கு வருகின்றது என்பதனை இதன் மூலம் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தச் சீராய்வுப் பணியைச் செவ்வனே செய்திட்ட சட்டக்கோப்பு சீராய்வுக்குழுவுக்கு, பேரவை செயற்குழு தனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

நன்றி,

முனைவர் பாலா சுவாமிநாதன்
செயலாளர்,
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை