மாவீரர் நாள் நினைவேந்தல்

Virtual

வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பாக “மாவீரர் நாள் நினைவேந்தல்” வரும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு (கிழக்கு சீர்தர நேரம்) இணையம் மூலமாக நடைபெற உள்ளது. நம் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படும். இந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற இலங்கையில் இருந்து ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் திருமிகு.அனந்தி சசிதரன் அவர்களும், தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு.பெ.மணியரசன் அவர்களும் இணைகிறார்கள்.

சங்க இலக்கியம்- அறிந்ததும் அறியாததும்

Virtual

மூவாயிரமாண்டுத்தொடர்ச்சியும் இலக்கியவளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலமெனச் சொல்லப்படும் சங்ககாலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்கள், தமிழினத்தின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பினையும் தமிழினம் கடைபிடித்த சிறந்த நாகரிக வாழ்க்கை முறையையும் நமக்குப் பறைசாற்றுவதோடு, மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, கலை, பண்பாட்டுக்கூறுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் அரிய சான்றாகவும் விளங்குகின்றன. அத்தகைய சிறப்புமிகு சங்க இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்ட தமிழறிஞர் மதிப்புக்குரிய வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், டிசம்பர் மாத இலக்கியக் கூட்டத்தில் " சங்க இலக்கியம்- அறிந்ததும் அறியாததும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.

Scroll to Top