- This event has passed.
சங்க இலக்கியம்- அறிந்ததும் அறியாததும்
December 14 @ 9:00 pm - 11:00 pm EST
மாதாந்திர இலக்கியக் கூட்டம் (இணையவழி )
சிறப்பு அழைப்பாளர் : எழுத்தாளர் வைதேகி ஹெர்பர்ட்
வணக்கம். மூவாயிரமாண்டுத்தொடர்ச்சியும் இலக்கியவளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலமெனச் சொல்லப்படும் சங்ககாலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்கள், தமிழினத்தின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பினையும் தமிழினம் கடைபிடித்த சிறந்த நாகரிக வாழ்க்கை முறையையும் நமக்குப் பறைசாற்றுவதோடு, மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, கலை, பண்பாட்டுக்கூறுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் அரிய சான்றாகவும் விளங்குகின்றன. அத்தகைய சிறப்புமிகு சங்க இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்ட தமிழறிஞர் மதிப்புக்குரிய வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், டிசம்பர் மாத இலக்கியக் கூட்டத்தில் “சங்க இலக்கியம் – அறிந்ததும் அறியாததும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய 18 சங்க இலக்கிய நூல்கள், ஏழு பதினெண்கீழ்கணக்கு நூல்கள், முத்தொள்ளாயிரம், பாண்டிக்கோவை முதலான தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் இவர். தாகூரின் கீதாஞ்சலியையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பொருளுரை, பதவுரை, சங்ககாலப் புலங்களை ஒப்புநோக்குதல், சங்ககால அணிகள், தாவரங்கள், விலங்கினங்களென நமக்குச் சங்கத்தமிழ்த் தேனை திணைதோறும் பிரித்துத் தந்திருக்கிறார் தம் இணையதளத்தினூடாக. 47 நூல்களை எழுதியுள்ள வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், தமிழ் இலக்கியத்தோட்டம் விருது, திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருது, தமிழக அரசின் விருது, அமெரிக்க அரசின் ஜனாதிபதி பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது, விளக்கு விருது போன்ற உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அமெரிக்க கிழக்கு நேரம்: டிசம்பர் 14, சனிக்கிழமை, 9 PM EST
இந்திய நேரம்: டிசம்பர் 15, ஞாயிறு, காலை 7.30 மணி
சூம் நேரலை -Zoom: http://tiny.cc/fetna-ilakkiyam
வலையொளியில் பார்க்க : https://www.youtube.com/fetna
முகப்புத்தகத்தில் பார்க்க: https://www.facebook.com/fetnaconvention
ஜனவரி மாதத்திலிருந்து திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வாயிலாக, முதல்நிலை சங்க இலக்கிய வகுப்புகளைத் தொடங்க உள்ளார். இந்த வகுப்புகள் வாரந்தோறும் வியாழன் இரவு 9 மணி முதல் 10 மணி வரை, 12 வாரங்களுக்கு நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை நிரப்பி சங்க இலக்கிய வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
https://tinyurl.com/Sanga-Ilakkiyam
9 pm EST, 6 pm PST, 8 pm CST – Every Thursday
இந்த 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அவரின் இணையதளமான https://sangambyphone.wordpress.com இல் கொடுக்கப்பட்டுள்ளது. தவறாமல் பங்கேற்கும் மாணவர்களுக்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சான்றிதழும் வழங்கப்படும்.
நன்றி,
இலக்கியக் குழு,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.