Fetna36
FiTEN 2023

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும்
சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும்

இணைந்து நடத்தும் பேரவையின் 36வது தமிழ் விழா
Fetna 36th Convention

June 30th, July 1st & 2nd

SAFE Credit Union Performance Arts Center
1301 L St, Sacramento, CA 95814

banner-dark-min

Federation of Tamil Sangams of North America (FeTNA)

(A registered, Non-Profit, Tax-Exempt 501(C)(3) Organization)

Slide

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

Federation of Tamil Sangams of North America (FeTNA)

(A registered, Non-Profit, Tax-Exempt 501(C)(3) Organization)

FeTNA is an umbrella organization of Tamil Sangams that function within the North American Continent. FeTNA is a registered, non-profit, tax-exempt 501(c)(3) organization. It was founded in 1987 by five Tamil Sangams: Tamil Association of Delaware Valley, Tamil Sangam of Washington & Baltimore, New York Tamil Sangam, Ilankai Tamil Sangam and Harrisburg Tamil Sangam. An assembly of over 400 Tamils near Philadelphia celebrated the inauguration in the spring of 1988. Since then the Federation (FeTNA for abbreviation) has organized an annual convention each of the subsequent years.

previous arrow
next arrow

பேரவைத் தமிழ்விழா​

வணக்கம்

தங்கத் தலைநகரில் தமிழ்த் திருவிழா!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் வெள்ளி விழா கண்ட சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடத்தும் பேரவையின் 36வது தமிழ் விழா கலிபோர்னியா தலைநகர் சாக்ரமெண்டோவில் ஜூன் 30, ஜூலை 1-2 தேதிகளில் தொன்மை, தமிழரின் பெருமை என்ற கருப்பொருளுடன் நடைபெற உள்ளது.

இப்பெரு விழாவில் சங்கம் கண்ட தமிழை அரியணையிலேற்றி அழகு பார்க்க உலகத் தமிழரை வருக வருகவென வரவேற்கின்றோம்.

“ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!”

என்று பாரதிதாசனைப் போல, நாமும் தமிழைக் கொண்டாட திரண்டு வாரீர்!!

இந்த மாபெரும் 36 ஆவது பேரவைத் தமிழ் விழா, ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை போட்டிகளுடனும், பாட்டுக்களுடனும், தமிழுக்கே உரித்தான கவிதை மற்றும் பேச்சுக்களுடனும் நடைபெறவிருக்கிறது.

விழா நடைபெறும் தேதிகள் அமெரிக்க விடுதலை தின விடுமுறை நாளுடன் இணைந்து அமைவதால், பங்கேற்பாளர்களுக்கு உதவும் வண்ணம், விழா அமைப்பாளர்கள் ஒரு சிறப்பு சுற்றுலாக் குழுவை அமைத்துள்ளனர். இந்தக் குழுவின் தன்னார்வலர்கள், தமிழ் விழாவில் பங்கேற்க வருகை தரும் அன்பர்கள் சாக்ரமெண்டோ மற்றும் சுற்றுப் பகுதிகளான சான் ஃப்ரான்சிஸ்கோ, நேப்பா பள்ளத்தாக்கு, லேக் டாஹோ, யோசிமட்டி தேசிய பூங்கா போன்ற புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலங்களை பார்ப்பதற்கு உதவக் காத்திருக்கின்றனர்.

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்”

என்ற வள்ளுத்தின்படி, இந்தத் தமிழ் மாநாடு கலை இலக்கியம் மட்டுமல்லாது, வாணிகம் வளர்க்க, தொழில் சார்ந்த பட்டறிவை மேம்படுத்தும் எண்ணத்துடன் தொழில் முனைவோர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு தொழில் சார்ந்தோர் மற்றும் தொழில் ஆர்வலர் பங்கு பெற்று பயனடையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

திசை, இன பாகுபடில்லாமல் வளர்ந்த தமிழ் மொழி மேலும் வளர, வாழ, தழைத்தோங்க உலகத் தமிழரை அன்புடன் அரவணைத்து,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் “வாரீர்…வாரீர்” என உங்கள் அனைவரையும் வரவேற்கிறது!

தமிழால் இணைவோம்!! தமிழால் உயர்வோம்!!

 

ஜான் பிரிட்டோ – ஒருங்கிணைப்பாளர்
Coordinator2023@fetna.org

மலர்மகள் அகிலன் – இணை ஒருங்கிணைப்பாளர்
JointCoordinator2023@fetna.org

Upcoming Events