
- This event has passed.
மாவீரர் நாள் நினைவேந்தல்
November 27, 2024 @ 8:00 pm - 10:00 pm CST

வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பாக “மாவீரர் நாள் நினைவேந்தல்” வரும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு (கிழக்கு சீர்தர நேரம்) இணையம் மூலமாக நடைபெற உள்ளது. நம் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படும்.
இந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற இலங்கையில் இருந்து ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் திருமிகு.அனந்தி சசிதரன் அவர்களும், தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு.பெ.மணியரசன் அவர்களும் இணைகிறார்கள்.
இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
நாள்/நேரம்
அமெரிக்க நேரம் : புதன்கிழமை, நவம்பர் 27 ஆம் நாள், இரவு 9:00 மணி ( EST – கிழக்கு சீர்தர நேரம்)
இலங்கை/இந்திய நேரம் : வியாழக்கிழமை, நவம்பர் 28 ஆம் நாள், காலை 7:30 மணி
சூம் இணைப்பு : https://tinyurl.com/MaaveerarNaal