- This event has passed.
ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள்
November 2, 2024 @ 10:00 am - 12:00 pm CDT
ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள்
சிறப்புத் தொடர்ச்சொற்பொழிவு
ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பயின்றதன்பின் – போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிலருக்க லாம் -நத்தத்தனார்
இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை உலகமக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துகின்ற, தமிழர்களின் ஒப்புயர்வுற்ற நீதிநூல் திருக்குறள். மனிதவாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் திருக்குறளின், பெருமையை போற்றியும் ஏற்றியும் உலகெங்கும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்வது நமது கடமை. அவ்வகையில், இவ்வரும்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள முனைவர்.திரு இர.பிரபாகரன் அவர்கள், எதிர்வரும் மாதங்களில், முதல் சனிக்கிழமைகளில் திருக்குறள் குறித்த சிறப்புத் தொடர்ச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தவுள்ளார். திருக்குறளின் மேன்மைகள் குறித்து தெளிவுறவும், அடுத்த தலைமுறைக்கு திருக்குறளின் நீதிகளைக் கடத்தவும் இணைய வழியில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பேரவை தங்களை அன்புடன் அழைக்கிறது.
தேதி & நேரம்:
அமெரிக்க கிழக்கு நேரம்:
நவம்பர் 02, சனிக்கிழமை, காலை 11 மணி
இந்திய நேரம்:
நவம்பர் 02, சனிக்கிழமை, இரவு 8.30 மணி
சூம் நேரலை – Zoom Live : http://tiny.cc/fetna-kural