
- This event has passed.
விட்டல் ராவின் கதையுலகம்

எழுத்துலகில் 50 ஆண்டுகளைக் கடந்து எழுதி வருபவர் விட்டல் ராவ். சிறுகதைகள், புதினங்கள், திரைப்படம், ஓவியம், நாடகம், கலைகள் சார்ந்த ஆவணப்பதிவுகளாகக் கட்டுரைகள் என்று பல்வேறு வகைமைகளில் எழுதி வருபவர். நுண்கலைகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் எழுதியவர். ஓவியர், புகைப்படக் கலைஞர் என பன்முகம் கொண்டவரும் கூட. இதுவரை 12 நாவல்கள், 140 சிறுகதைகள் அடங்கிய 5 சிறுகதைத் தொகுதிகள் மற்றும் 12 கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. சாகித்ய அகாடமிக்காக சிறுகதைத் தொகுப்பொன்றை மொழி பெயர்த்திருக்கிறார். 1976-ல் வெளிவந்த “போக்கிடம்” நாவல் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. 1981ஆம் ஆண்டில் வெளிவந்த அவருடைய நதிமூலம் மிகச்சிறந்த தமிழ் நாவல் வரிசையில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. அண்மையில் ‘விளக்கு’ விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாளை நடைபெறவுள்ள இலக்கியக்கூட்டத்தில் எழுத்தாளர் விட்டல் ராவ் கலந்துகொண்டு “விட்டல் ராவின் கதையுலகம்” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாள்: நவம்பர் 16, சனிக்கிழமை, காலை 11 மணி,
அமெரிக்க கிழக்கு நேரம்
இந்திய நேரம்: நவம்பர் 16, சனிக்கிழமை, இரவு 9.30 மணி
சூம் நேரலை – Zoom: http://tiny.cc/fetna-ilakkiyam