- This event has passed.
தமிழும் மக்களிசையும், நவீன இலக்கியம்
August 28 @ 8:00 pm - 10:00 pm CDT
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள், புதன்கிழமை இரவு, கிழக்கு அளவீட்டு மணி 9, பசிபிக்நேரம் மாலை 6 மணி, இந்திய நேரம் ஆகஸ்ட் 29, காலை 6.30 அளவில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், “கலை இலக்கியக் கூட்டம்” இணையவழியில் நிகழவுள்ளது. அக்கூட்டத்தில், “தமிழும் மக்களிசையும்” எனும் தலைப்பில் பாடகர், இசையமைப்பாளர், முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்களும், “நவீன இலக்கியம்” எனும் தலைப்பில் எழுத்தாளர் அருள்மொழி அவர்களும் நம்மிடையே உரையாற்றவுள்ளனர்.
தமிழின் தொன்மை என்பது நாட்டுப்புற, வாய்மொழி இலக்கியங்களில் சிப்பிக்குள் முத்துப் போல காலங்காலமாய் நமக்குக் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது. அவற்றையெல்லாம் ஆய்வு செய்து, முனைவர் பட்டமும் பெற்று, பாடல்களுக்கு இசையமைப்பது, பாடுவதெனப் பல தளங்களில் தொடர்ந்து செயலாற்றி பெரும்புகழ் ஈட்டியிருப்பவர்தான் கலைமாமணி முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள். பல திரைப்படங்களிலும் பாடியிருக்கின்றார். நூலாசிரியராகவும் திகழ்கின்றார். இவர் இசையமைத்துப் பாடியிருக்கும் ‘ஆத்தா உன் சேலை’, ’முன்னூறு நாள் சுமந்து’ முதலான பாடல்கள் உலகெங்கும் புகழ்பெற்று, பல கோடிக்கணக்கானோரைப் பார்வையாளராகப் பெற்றிருக்கும் பாடல்களாகும்.
சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மனக்கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய பழக்கவழக்கங்கள், செய்கைகள் முதலானவற்றைக் கூர்ந்து கவனித்து அவற்றைத் தம் எழுத்துகளால் பொதுச்சமூகத்துக்குத் தொடர்ந்து படம் பிடித்துக் காண்பித்துக் கொண்டிருப்பவர்தாம் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள். அமெரிக்க நகரான சியாட்டில் நகரில் வசிக்கும் இவர், அந்திமழை, செம்மலர் உள்ளிட்ட இதழ்களில் எழுதிய கதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அண்மையில் வெளியாகியிருக்கும், “டைரி” எனும் அவரது நூல் சமூகத்தின் மீதான பார்வையை மேலும் கூர்மைப்படுத்துவதோடு விசாலப்படுத்தியும் இருக்கின்றதென வர்ணிக்கின்றனர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பாமரன் முதலானோர்.
பேரவையின் கலை இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுவோம். இணையவழிக் கூட்டமென்பதால், உலகெங்கும் இருக்கும் தமிழ் நண்பர்கள், பேரவை ஆர்வலர்கள்,தத்தம் உற்றார், உறவினர், நண்பர்களுடன் கலந்து கொள்ளுங்கள். தமிழிசையும் தற்கால இலக்கியமும் பயின்று, நுகர்ந்து பயனுறுவோம்!
Date/Conference info
August 28, 2024, Wednesday
9:00 PM Eastern Time
6:00 PM Pacific Time
August 29, 6:00 PM Indian Time
Live Zoom Meeting Link: https://tinyurl.com/Kalaiilakkiyakoottam-Aug
ID: 943 274 2572 Pwd: 159753
YouTube Live: https://www.youtube.com/@FeTNA/live