- This event has passed.
தமிழர் பணிகள் நாள்
December 17, 2024
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் புயல்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியமை தெரிந்தவுடன், உடனடித் தீர்வாகச் சில முன்னெடுப்புகள் துவக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கூரைகளற்ற வீடுகளுக்கும், நீர்க்கசிவுக்குட்பட்ட தற்காலிகக் கூடாரங்களுக்கும் தற்காப்புக்காக கூரைவேய்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான விரிப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
புல்லுமலைப்பகுதி, மாவளையாறு, மரப்பாலம் ஆகிய ஊர்களில் உள்ள குடும்பங்களின் வீடுகளுக்கு, அப்பகுதியில் முன்வந்த தன்னார்வலர்களின் உதவியுடன் கூரைகள் வேயப்பட்டும், தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டும், அவர்களுக்குத் தேவையான உறைவிடங்கள் கட்டமைக்கப்பட்டன. துயர்துடைப்புப் பணிகளில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் NOW WOW எனும் அமைப்பும் இணைந்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. முன்னெடுப்பினை மேற்கொண்ட, ஈழத்தமிழர் செயற்பாட்டுக்குழுவினர், தன்னார்வலர்கள் பாராட்டுக்குரியவர்கள்.