
- This event has passed.
கவிதையெனும் கலை – இலக்கியக் கூட்டம்

*கவிதையெனும் கலை*
கவிதை எழுதுவது
என்பது
ஒரு
குண்டு பல்பை
ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது
முழுமையானதின்
அமைதியை ஏந்தி
பல்ப்
ஒளி வீசத் தொடங்கியது
ஒரு
மெல்லிய இழை
நிசப்தத்தில்
எவ்வளவு
நீள
நன் கணம் – தேவதச்சன்.
மொழியின் உயரிய வடிவம் கவிதை. ஆதியில், கவிதையாக இருந்தது தமிழ். தமிழ்க்கவிதை இரண்டாயிரமாண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்ச்சியுடையது. சங்கக்கவிதை என்ற வளமான கவிமரபு, தமிழுக்கே உரியது. தமிழ் மட்டுமல்லாமல் செவ்வியல் மொழிகள் அனைத்திற்க்கும் உயரிய இலக்கிய வடிவம், கவிதையாய் இருக்கிறது. கவிதையெனும் கலை எனும் இந்நிகழ்வில் *கவிதையைப் பார்த்தல்* என்ற தலைப்பில் கவிஞர் போகன் சங்கரும், *கவிதையெனும் வலசைப்பாதை* என்ற தலைப்பில் கவிஞர் வெய்யிலும் சிறப்புரையாற்றவிருக்கிறார்கள்.
அபூர்வங்களையும், அபத்தங்களையும் காட்சிப்படுத்தும் கவிமொழியைக் கொண்டவை கவிஞர் போகனின் கவிதைகள். சுயஎள்ளலும், அகத்தேடலும் கொண்ட கவிதைகளுக்காகப் புகழ்பெற்றவர் போகன். ‘எரிவதும் அணைவதும் ஒன்றே, தடித்த கண்ணாடி போட்ட பூனை’ முதலான கவிதை நூல்களையும்,’கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போக புத்தகம், திகிரி, மர்ம காரியம்’ முதலான சிறுகதை நூல்களையும் படைத்துள்ளார்.
சமகால நவீன தமிழ்க் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர் கவிஞர் வெய்யில். இவரது கவிதைகள் வடிவரீதியில புதிய அழகியலை உருவாக்குபவை. வெய்யிலின் கவிமொழி, மரபும் நவீனமும் ஒன்றிணைந்து உருவானது. ‘புவன இசை, குற்றத்தின் நறுமணம், அக்காளின் எலும்புகள், பெருந்திணைப் பூ திண்ணும் இசக்கி, ஆக்டோபஸின் காதல்’ முதலான கவிதைத்தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மார்ச் 1, சனிக்கிழமை
காலை 11 மணி, அமெரிக்கக்கிழக்கு நேரம்
இரவு 9.30 மணி, இந்திய நேரம்:
சூம் நேரலை -Zoom: https://fetna.org/ilakkiyam-online
வலையொளியில் பார்க்க :
YT Live URL: http://fetna.org/ytlive
FB Live URL: http://fetna.org/fblive
நன்றி,
*இலக்கியக் குழு* ,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.