Loading Events

« All Events

  • This event has passed.

ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த திருக்குறள்,  அமர்வு – 4

April 5, 2025 @ 7:00 pm EDT
IMG 20250322 WA0039

 

சிறப்புத் தொடர்ச்சொற்பொழிவு- அமர்வு – 4
“குறள் கூறும் காதல்- பகுதி 1 “
“ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு
பகிர்ந்தற்பின் –போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்க்கேட்க வீற்றிலருக்க லாம்” -நத்தத்தனார்
இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை உலக மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துகின்ற, தமிழர்களின் ஒப்புயர்வுற்ற நீதிநூல் திருக்குறள். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் திருக்குறளின், பெருமையை போற்றியும் ஏற்றியும் உலகெங்கும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்வது நமது கடமை. அவ்வகையில், இவ்வரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள முனைவர்.திரு இர.பிரபாகரன் அவர்கள், வருகிற சனிக் கிழமை ஏப்ரல் -5 ஆம் தேதி “குறள் கூறும் காதல் ” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். திருக்குறளின் மேன்மைகள் குறித்து தெளிவுறவும், அடுத்த தலைமுறைக்கு திருக்குறளின் நீதிகளைக் கடத்தவும் இணைய வழியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பேரவை தங்களை அன்புடன் அழைக்கிறது.
தேதி & நேரம்:
அமெரிக்க கிழக்கு நேரம்: ஏப்ரல் 5, சனிக்கிழமை, மாலை 7 மணி
அமெரிக்க மத்திய நேரம்:ஏப்ரல் 5, சனிக்கிழமை, மாலை 6 மணி
சூம் நேரலை – Zoom Live: https://fetna.org/kural
வலையொளியில் பார்க்க :
முகப்புத்தகத்தில் பார்க்க
நன்றி,
இலக்கியக் குழு,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

Details

  • Date: April 5, 2025
  • Time:
    7:00 pm EDT
  • Event Category:

Venue

  • Virtual

Organizer