Loading Events

« All Events

  • This event has passed.

ஆறாம் திணை -கவிதைப் பட்டறை

February 28 @ 12:00 am - March 21 @ 11:59 pm EST

ஆறாம் திணை -கவிதை மற்றும் சிறுகதை தொகுப்பு வெளியீடு
இடம், மொழி, கலை, பண்பாடு, காலநிலை எனப் பலவற்றாலும் அந்நியப்பட்டிருக்கின்ற ஒரு நிலத்தில் வேரற்ற கொடி போலப் படரும் வாழ்வைக் குறித்து எழுதுவதும், புலம்பெயர் நிலத்துடன் உரையாடல் நிகழ்த்துவதும் அவசியமாகின்றது.
புலம்பெயர் வாழ்வியலில், சமூக இடம், பண்பாட்டு மாற்றங்கள், புலம்பெயர் மண்ணின் நிகழ்வுகள், பண்பாட்டு அதிர்வுகள் முதலானவற்றை மையப்படுத்தி வெளியாகும் வட அமெரிக்கப் புலம்பெயர் இலக்கியம், தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கிய இடம் வகிக்குமென்பதில் ஐயமில்லை.
புலம்பெயர் வாழ்வியலை ஆவணப்படுத்த வட அமெரிக்கத் தமிழர்களிடம் இருந்து சிறுகதைகள்/கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
புலம்பெயர் வாழ்வியலைக் கருவாகக் கொண்டு எழுதப்படும் கவிதைகள்/சிறுகதைகள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியூசெர்சி நகரில் நடைபெற இருக்கும் 39-ஆவது பேரவை விழாவில் தொகுப்பாக வெளியிடப்படும்.
இதையொட்டி பேரவை இலக்கியக்குழுவின் சார்பாக வடஅமெரிக்க வாசகர்களுக்கும், புதிதாக எழுத வருபவர்களுக்கும் கவிதை மற்றும் சிறுகதை இணைய பயிற்சி முகாம்கள் நடைபெற இருக்கின்றன. கவிதை பயிற்சி முகாமில் கவிஞர் சுகிர்தராணி மற்றும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் கலந்துகொண்டு கவிதை எழுதுவதன் நுட்பங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள உள்ளனர். சிறுகதை பயிற்சி முகாமில் எழுத்தாளர் குணா கந்தசாமி மற்றும் எழுத்தாளர் திருச்செந்தாழை கலந்து கொண்டு கதை எழுதுவதில் உங்கள் சிந்தனையை சிறந்த முறையில் வெளிப்படுத்திடும் உத்திகளை பகிர உள்ளனர்.
கவிதை மற்றும் கதை எழுதிட ஆர்வமுள்ள வட அமெரிக்க வாழ் தமிழர்களை அன்புடன் அழைக்கிறோம். பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த இணைய பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முடியும்.
பதிவு செய்வதற்கான இணைப்பு:
கவிதை பட்டறை : https://tinyurl.com/KavithaiThinai
சிறுகதை பட்டறை : https://tinyurl.com/Sirukathai2026
பதிவு செய்வதற்கான கடைசி நாள் : பிப்ரவரி 25, 2026
இணைய பயிற்சி முகாம் நடைபெறும் நாட்கள்:
கவிதை : பிப்ரவரி 28, மார்ச் 21
சிறுகதை : மார்ச் 1 மற்றும் மார்ச் 22
படைப்புகளை அனுப்பி வைக்கக் கடைசிநாள்: ஏப்ரல் 15, 2026
விதிமுறைகளை அறிந்து கொள்ள, படைப்புகளை அனுப்பி வைக்க:
இன்றே பதிவு செய்வீர் !!
பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயனடைவீர் !!
நன்றி

Details

  • Start: February 28 @ 12:00 am EST
  • End: March 21 @ 11:59 pm EST
  • Event Category:
  • Event Tags:

Organizer