- This event has passed.
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
December 30, 2024 @ 9:00 pm - 10:00 pm EST
புவி இருக்குமட்டிலும், அண்டங்கள் இருக்குமட்டிலும் உயிர்த்தே இருக்குமிந்த இன்பத்தமிழ், நம் பைந்தமிழ். அணி அணியாய் இலக்கியங்கள்; அவற்றுள் உலகுக்கே பொதுமறையாய்த் திகழ்கின்ற திருக்குறள், செந்தமிழுக்கும் தமிழருக்கும் தனி அடையாளம். அத்திருக்குறள் தந்த மாமணியாம் திருவள்ளுவனும் தமிழனுக்கு ஓர் அடையாளம். முக்கடல்சூழ் தென்னாட்டு முனையினிலே வான்முட்டுமளவுக்கும் நெடிதுயர்ந்தே நிற்கின்ற அய்யன். அய்யனின் சிலைக்கு வெள்ளிவிழா. உளமகிழ்ந்து கொண்டாடுவோம், ஆர்ப்பரிப்போமென வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை அழைக்கின்றது.
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா (25ஆவது ஆண்டு)