Home2021-01-13T01:04:10-05:00

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் திருநாள்/ பொங்கல் விழா கொண்டாட்டம்

தமிழோடு! தீஞ்சுவைத் தமிழைத்

தேனெனச் சொரிந்து

தெள்ளமுதைத் திகட்டாமல்

தருமெங்கள் ஈழ, தமிழக உறவுகளே!

தகிக்கும் சொல் வேள்வியில்

தங்கமென ஒளிசிந்தப் போகும்

தனிப் பெரும் தாய் மொழியே

தமிழே உயிரே !

இலக்கியம், சமூகம், உறவு என

மூன்று குதிரை தேரேறி

உனைக்காண வருகின்றோம்

உன்னை இங்கே கொண்டாடி

உறவுப் பாலத்தை

உறுதிப்படுத்த வருகின்றோம்!

அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் இலங்கை விவாதிகள் கழகம் இணைந்து வழங்கும் “அனல் வினா மன்றம்”! சூடு பறக்கப் போகும் தமிழ் விவாதத்தோடு, ஈழ- தமிழக உறவின் தொன்மையையும் விளக்கவிருக்கும் தனிப்பெரும் நிகழ்வு.

அறிவியல் முறைமைகளால், சாதி/மதம் கடந்த தமிழ்ச் சிந்தனைகளால், புதிய “உலகத்” தமிழ்வெளியில் பயணிப்பதே நம் நோக்கம். மற்றும் ஈழத்துக்கு மேலும் மேலும் பாலங்கள் அமைப்பதே! (குறிப்பாக மாணவர்கள்/பெண்கள்) உறவுப் பாலம், கருத்துப் பாலம், கல்விப் பாலம், முன்னேற்றப் பாலம்..இப்படிப் பல பாலங்களால், சமூகநீதி மிக்க “தமிழ்” என்கிற ஒரே நற்குடையின் கீழ் இணையும் இன்பம்! அவரவர் தனித் தீவுகளிலேயே தேங்கி விடாது, தமிழ்த் தேரை, உலகப் பெரு வீதிகளிலும் ஓட்டுவோம், வாருங்கள்!

ஜனவரி 2021 ஆம் ஆண்டு 16 ஆம் நாள் சனிக்கிழமை நடக்கவிருக்கும் நிகழ்வில் நாம் அனைவரும் இணைவோம்.நன்றி!

பார்வையாளர்களுக்கு வினாடி வினாவும் பரிசும் உண்டு

Link: youtube.com/fetna
Date: 1/16/2021
Time: 11:00 AM Eastern Time 9:30 PM India/Srilanka

பேரவையின் முகநூல் இணைப்பை like செய்து பேரவை நிகழ்ச்சி குறித்த தகவலை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுமாறு   அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இதற்கு முந்தைய இலக்கியக் கூட்டங்களின் காணொளியை கீழ் காணும் இணைப்பில் சென்று பார்க்களாம்

https://www.youtube.com/playlist?list=PLQkQAGwIwW5SVO0XzO4LlP9jQMIOuXOzc

News from FeTNA and Member Sangams

தமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி

December 16th, 2019|0 Comments

தமிழகத்தில் தமிழிசையை ஊக்குவிக்க இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையுடன் இணைத்து தமிழிசை விழாவை ஒவ்வொரு வருடமும் பேரவை நடத்த உதவி செய்து வருகிறது. 2019ம் ஆண்டு விழாவில் [...]

  • முனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி

முனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி

December 16th, 2019|0 Comments

முனைவர் அழகப்பா இராம்மோகன் ஐயா அவர்களின் மறைவிற்கு. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. தமிழர் பண்பாட்டு கையேடு நூலினை உலகிற்கு [...]

மரியாதைக்குரிய இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி…..

July 26th, 2019|0 Comments

மரியாதைக்குரிய இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் முப்பெரும் விழாவிற்கான வாழ்த்து செய்தி ( Greetings Message from Honorable Indian Prime Minister Thiru.Narendra [...]

மரியாதைக்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K. பழனிசாமி

June 26th, 2019|0 Comments

மரியாதைக்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K.  பழனிசாமி அவர்களின்  வாழ்த்து செய்தி (Greetings Message from Honorable Tamil Nadu Chief Minister Thiru.Edappadi K. [...]

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்

May 13th, 2019|0 Comments

தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்தவராகத் திகழ்ந்த, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமையன்று தனது 73 ஆவது அகவையில் காலமானார். அன்னாருக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்கள் [...]

தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்!

April 8th, 2019|0 Comments

நடமாடும் தமிழ் பல்கலைக்கழகம் தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன்* அய்யா அவர்கள் இன்று (06.04.2019 ) காலை 7.00 மணிக்கு இயற்கை எய்தினார்.நம் தமிழ் இனத்திற்கு [...]