மரியாதைக்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K. பழனிசாமி

மரியாதைக்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K. பழனிசாமி

2019-12-26T02:41:28-05:00

மரியாதைக்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K.  பழனிசாமி அவர்களின்  வாழ்த்து செய்தி (Greetings Message from Honorable Tamil Nadu Chief Minister Thiru.Edappadi K. Pazhanisamy)

மரியாதைக்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K. பழனிசாமி2019-12-26T02:41:28-05:00

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்

2019-05-13T00:59:02-05:00

தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்தவராகத் திகழ்ந்த, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமையன்று தனது 73 ஆவது அகவையில் காலமானார். அன்னாருக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக! கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப் பட்டனம் பகுதியைச் சேர்ந்த தோப்பில் முகமது மீரான், ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சு வண்ணம் தெரு என ஐந்து நாவல்களையும் அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, அனந்த சயனம் காலணி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், தோப்பில் [...]

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்2019-05-13T00:59:02-05:00

தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்!

2019-04-08T07:23:16-05:00

நடமாடும் தமிழ் பல்கலைக்கழகம் தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன்* அய்யா அவர்கள் இன்று (06.04.2019 ) காலை 7.00 மணிக்கு இயற்கை எய்தினார்.நம் தமிழ் இனத்திற்கு ஓர் மாபெரும் இழப்பு..அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வட அமெரிக்கத்தமிழர்கள் சார்பிலும், வட அமெரிக்கத்தமிழ் மன்றங்கள் சார்பிலும்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. சிலம்பொலியார் பற்றிய குறிப்புகள்  பெயர்                 :           சு.செல்லப்பன்  பிறந்த ஆண்டு     [...]

தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்!2019-04-08T07:23:16-05:00

பேரவையின் தமிழிசை விழா – 2018

2019-01-26T03:04:32-05:00

பேரவையின் தமிழிசை விழா - 2018 பேரவையின் ஆறாம் ஆண்டு தமிழிசை விழா சென்னை வடபழனியில் உள்ள  திரு. இராமசாமி நினைவுப் (SRM) பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 29 திசம்பர் 2018 இல் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. நம் பேரவை (FeTNA) கடந்த 31 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் “தமிழ் விழா” எனும் பெருவிழாவை ஒருங்கிணைப்பது போலவே தாய்த் தமிழ்நாட்டில் தமிழிசை வளர்ச்சிப் பணியை முன்னெடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும்  மார்கழித் திங்களில் ”தமிழிசை விழா” வை [...]

பேரவையின் தமிழிசை விழா – 20182019-01-26T03:04:32-05:00

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்!

2018-11-27T02:06:53-05:00

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்! தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்வரலாற்றியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் இன்று (நவம்பர் 26, 2018) இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவிற்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர் அக்டோபர் 2, 1930-‍ இல் மண்ணச்சநல்லூர் - திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணியில் இருந்தவர். [...]

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்!2018-11-27T02:06:53-05:00

கஜா புயல் நிவாரண கோரிக்கை

2019-01-26T00:45:42-05:00

பேரன்புடைய தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் வீசிய "கஜா" புயல் ஏற்படுத்திய சேதங்களை நீங்கள் செய்திகள் வழியாக அறிந்திருப்பீர்கள். இயற்கை எப்போது தன்னுடைய கைகளை அகலவிரித்து விரல்களால் தழுவிக் கொள்ளும் என்றோ, கோர நகங்களால் கீறி காயப் படுத்தும் என்றோ, யாரும் அறுதியிட்டு சொல்ல முடியாது. நமது ஆற்றலுக்கு, அறிவுக்கு அப்பாற்பட்டது இயற்கை. பலநேரங்களில் தென்றலாக வருகிற காற்றே புயலாக புறப்படும்போது ஏராளமான சேதங்களை ஏற்படுத்திவிடுகிறது.நாகை மாவட்டம் முழுவதையுமே புரட்டிப் போட்டுவிட்டது. திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை [...]

கஜா புயல் நிவாரண கோரிக்கை2019-01-26T00:45:42-05:00

10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா

2018-10-01T02:50:39-05:00

மாநாட்டுச் செய்தி அறிவிப்பு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. மேலும் தகவல் அறிய​...

10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா2018-10-01T02:50:39-05:00

கர்நாடக இசை அனைவருக்குமானது

2019-01-26T00:46:48-05:00

கர்நாடக இசையில் உள்ள பல்வேறு பரிமாணங்களை மதச் சார்பின்றி மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசைக் கலைஞர்கள் மீதான அடக்கு முறையை எதிர்த்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் பேரவை தங்களது கண்டனத்தைத் தெரிவிக்கிறது. மேலும், கர்நாடக இசையோ அன்றி பரத நாட்டியமோ ஓர் மதத்திற்கோ அல்லது இனத்திற்கோ சார்புடையது அன்று.   இற்றைய நாளில், இசைக்கப்படும் கர்நாடக இசையானது,  சற்றொப்ப  2500 ஆண்டுகட்கு முன்னர் தோன்றிய தமிழிசையிலிருந்து அண்மையில் பரிணமித்ததே ஆகும். இவ்விசையானது, சைன, புத்த, ஆசீவகம் போன்ற [...]

கர்நாடக இசை அனைவருக்குமானது2019-01-26T00:46:48-05:00

கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி!

2018-08-10T02:46:58-05:00

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி! தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், தி.மு.க கட்சியின் தலைவராகவும், முத்தமிழ் அறிஞராகவும் விளங்கிய கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள் இன்று தனது 95வது அகவையில் இயற்கை எய்தினார். தந்தை பெரியாரின் சீடராக, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தமிழ்நாடு அரசியலில் ஈடுபடத் தொடங்கியவர் கலைஞர். இந்திய மக்களாட்சி வரலாற்றிலேயே தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 [...]

கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி!2018-08-10T02:46:58-05:00

தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்!!!

2018-05-23T01:25:16-05:00

பேரன்புடையீர் வணக்கம்.   தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்!!!     தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர உற்பத்தி ஆலையானது செயல்பட்டுவருகின்றது. இவ்வாலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாராப்பகுதிகளில் வாழும் மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.    மக்களில் பெரும்பாலோருக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் கொடிய நோயான புற்று நோயால் பாதிப்புக்கு உள்ளாகி, சொல்லவொனாத் துன்பத்திற்கு ஆளானதைத் தொடர்ந்து; இனிவரும் [...]

தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்!!!2018-05-23T01:25:16-05:00