
வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் திருநாள்/ பொங்கல் விழா கொண்டாட்டம்
தமிழோடு! தீஞ்சுவைத் தமிழைத்
தேனெனச் சொரிந்து
தெள்ளமுதைத் திகட்டாமல்
தருமெங்கள் ஈழ, தமிழக உறவுகளே!
தகிக்கும் சொல் வேள்வியில்
தங்கமென ஒளிசிந்தப் போகும்
தனிப் பெரும் தாய் மொழியே
தமிழே உயிரே !
இலக்கியம், சமூகம், உறவு என
மூன்று குதிரை தேரேறி
உனைக்காண வருகின்றோம்
உன்னை இங்கே கொண்டாடி
உறவுப் பாலத்தை
உறுதிப்படுத்த வருகின்றோம்!
அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் இலங்கை விவாதிகள் கழகம் இணைந்து வழங்கும் “அனல் வினா மன்றம்”! சூடு பறக்கப் போகும் தமிழ் விவாதத்தோடு, ஈழ- தமிழக உறவின் தொன்மையையும் விளக்கவிருக்கும் தனிப்பெரும் நிகழ்வு.
அறிவியல் முறைமைகளால், சாதி/மதம் கடந்த தமிழ்ச் சிந்தனைகளால், புதிய “உலகத்” தமிழ்வெளியில் பயணிப்பதே நம் நோக்கம். மற்றும் ஈழத்துக்கு மேலும் மேலும் பாலங்கள் அமைப்பதே! (குறிப்பாக மாணவர்கள்/பெண்கள்) உறவுப் பாலம், கருத்துப் பாலம், கல்விப் பாலம், முன்னேற்றப் பாலம்..இப்படிப் பல பாலங்களால், சமூகநீதி மிக்க “தமிழ்” என்கிற ஒரே நற்குடையின் கீழ் இணையும் இன்பம்! அவரவர் தனித் தீவுகளிலேயே தேங்கி விடாது, தமிழ்த் தேரை, உலகப் பெரு வீதிகளிலும் ஓட்டுவோம், வாருங்கள்!
ஜனவரி 2021 ஆம் ஆண்டு 16 ஆம் நாள் சனிக்கிழமை நடக்கவிருக்கும் நிகழ்வில் நாம் அனைவரும் இணைவோம்.நன்றி!
பார்வையாளர்களுக்கு வினாடி வினாவும் பரிசும் உண்டு
Link: youtube.com/fetna
Date: 1/16/2021
Time: 11:00 AM Eastern Time 9:30 PM India/Srilanka
https://www.youtube.com/
News from FeTNA and Member Sangams
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வணக்கம் கடந்த சில நாட்களாக ஒரு சில சமூக ஊடகங்களில் ஓலைச்சுவடி பிரதி எடுப்பது தொடர்பாகப் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேரவையோடு [...]
கொரோனா நிவாரண நிதி
தமிழுறவுகள் அனைவருக்கும் வணக்கம்: நலம், நலமே விழைக! கொரோனா (COVID-19) என்ற இந்த தீ நுண்தொற்றுக்கிருமி உலகத்தையே பாதித்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் இந்த [...]
உதவும் இதயங்கள்
உதவும் இதயங்கள் நாம் அனைவரும் இந்த அமெரிக்க நாட்டிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களாய் நல்வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எத்தனையோ சரித்திரங்களையும் படைத்து இருக்கிறோம். அதேசமயம் எத்தனையோ [...]
அமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…
அமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய அமைப்பு தலைச்சிறந்த தமிழறிஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் புதுமைப்பித்தன் நினைவு விருது வழங்கி பெருமை படுத்தி வருகிறது. 2018க்கான விருதுகளுக்கு [...]
இந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி
இந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி (Greetings Message from Honorable Indian President Thiru.Ram Nath Kovind)
தமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..
தமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு பொறியியல், அறிவியல் மற்றும் உயர் தொழிற்நுட்பம் படித்து வரும் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கவும் "யாதும் [...]