Calendar of Events

Latest Past Events

FC2025: தன்னார்வலர்கள் கூட்டத் துவக்கவிழா

Raleigh NC

தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2025ஆம் ஆண்டிற்கான அமெரிக்கத் தமிழ்விழா, வட கரொலைனா மாகாணம் ராலே நகரில் சூலை 3, 4 & […]

மாவீரர் நாள் நினைவேந்தல்

Virtual

வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பாக “மாவீரர் நாள் நினைவேந்தல்” வரும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு (கிழக்கு சீர்தர நேரம்) இணையம் மூலமாக நடைபெற உள்ளது. நம் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படும். இந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற இலங்கையில் இருந்து ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் திருமிகு.அனந்தி சசிதரன் அவர்களும், தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு.பெ.மணியரசன் அவர்களும் இணைகிறார்கள்.

விட்டல் ராவின் கதையுலகம்

Virtual

எழுத்துலகில் 50 ஆண்டுகளைக் கடந்து எழுதி வருபவர் விட்டல் ராவ். சிறுகதைகள், புதினங்கள், திரைப்படம், ஓவியம், நாடகம், கலைகள் சார்ந்த ஆவணப்பதிவுகளாகக் கட்டுரைகள் என்று பல்வேறு வகைமைகளில் எழுதி வருபவர். நுண்கலைகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் எழுதியவர். ஓவியர், புகைப்படக் கலைஞர் என பன்முகம் கொண்டவரும் கூட. இலக்கியக்கூட்டத்தில் எழுத்தாளர் விட்டல் ராவ் கலந்துகொண்டு "விட்டல் ராவின் கதையுலகம்” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Scroll to Top