Loading Events

« All Events

  • This event has passed.

தடம் – இளையோருக்கான உயர்கல்வி வழிகாட்டல்

November 21 @ 10:00 am - 12:00 pm EST

Thadam is a FeTNA mentorship platform that connects Tamil youth across North America with Tamil students and young professionals who have walked the path just ahead of them.

Through live panels and ongoing conversations, mentors share honest, firsthand advice on academics, careers, and personal growth, giving students the guidance and representation many first-generation families do not have built in.

At its core, Thadam, meaning “path” in Tamil, is about our community investing in its next generation, so that every Tamil student has someone who looks like them and can help light the way forward.


‘தடம்’ என்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் வழிகாட்டல் தளம். வட அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் இளைஞர்களை, அவர்கள் செல்ல விரும்பும் பாதையில் சில அடிகள் முன்னே சென்றுள்ள தமிழ் மாணவர்களுடனும், பல்வேறு துறைகளில் பணியாற்றும் இளம் தமிழர்களுடனும் இத்தளம் இணைக்கிறது.

நேரடிக் கலந்துரையாடல்களிலும், அதைத் தொடர்ந்து நடைபெறும் உரையாடல்களிலும், வழிகாட்டிகள் தங்கள் சொந்த அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார்கள். படிப்பு, தொழில் தேர்வு, தனிப்பட்ட வளர்ச்சி குறித்த கேள்விகளுக்கு அந்த அனுபவங்கள் வழிகாட்டுகின்றன. வட அமெரிக்காவில் முதன்முறையாகக் குடியேறிய பல தமிழ்க் குடும்பங்களில், இங்குள்ள கல்வி வாய்ப்புகளையும் தொழில் வாய்ப்புகளையும் நேரில் அறிந்து வழிகாட்டக்கூடியவர்கள் வீட்டிலேயே இருப்பது அரிது. அந்த இடைவெளியை ‘தடம்’ நிரப்புகிறது.

‘தடம்’ என்றால் பாதை. ஒவ்வொரு தமிழ் மாணவரும் தன்னைப் போன்ற ஒருவரை முன்மாதிரியாகக் காணவும், அடுத்த அடியை எடுத்து வைக்கும்போது வழிகாட்ட ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையைப் பெறவும் வேண்டும். அதற்காக நம் சமூகம் தனது நேரத்தையும் அனுபவத்தையும் அடுத்த தலைமுறையுடன் பகிர்ந்துகொள்வதே ‘தடம்’ முயற்சியின் நோக்கம்.


தடம் – இளையோருக்கான உயர்கல்வி வழிகாட்டல்

பேரவை இளையோர் குழு வழங்கும் இந்நிகழ்ச்சியில், கல்லூரி விண்ணப்பங்கள், துறைத் தேர்வு மற்றும் எதிர்காலக் கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்களும் இளம் தொழில் வல்லுநர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

நாள்: சனிக்கிழமை, நவம்பர் 21, 2026
நேரம்: காலை 10:00–நண்பகல் 12:00 மணி, கிழக்கு நேரம்
பதிவு: இங்கே பதிவு செய்யுங்கள்

Zoom: Click here | Zoom ID: Meeting ID: 943 274 2572 | Passcode: 2025
YT Live: http://fetna.org/ytlive
FB Live: http://fetna.org/fblive


Details

  • Date: November 21
  • Time:
    10:00 am - 12:00 pm EST
  • Event Category: