
- This event has passed.
மக்களிசைப் பயிற்சிப்பட்டறை
January 4 @ 9:30 am - 11:30 am EST

வணக்கம். தமிழர் மக்களிசைப் பாடல், நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனும் விருப்பம் உங்களுக்கு உள்ளதா? அதை நிறைவேற்றும் ஓர் அரிய வாய்ப்பைப் பேரவை (FeTNA) முதல் முறையாக உங்களுக்கு வழங்குகிறது!
தமிழ்மண்ணின் மணம் தரும் மக்களிசை நாட்டுப்புறப் பாடல்களில் தன்னிகரில்லாத ஆளுமையான கலைமாமணி தமிழிசை வேந்தர் முனைவர்.புஷ்பவனம் குப்புசாமி அவர்கள், தமிழ்ப்பேரவையின் மரபுக்கலைகள் குழுவுடன் இணைந்து பயிற்சிப்பட்டறையின் வாயிலாக மக்களிசையைக் கற்றுத் தருகிறார்கள்.
இணையவழியில் நடைபெறும் இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு கட்டணம் இல்லை! தமிழ்ப்பாடல்களைச் சிறப்பாகக் கற்றுக் கொள்ள, இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.