வணக்கம் வட அமெரிக்கா

Vanakkam Vada America

அமெரிக்கா கனடா வாழ் தமிழ் அன்பர்களே…

 

ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு இனிய செய்தியோடு வருகிறோம்

 

பேரவை பெருமையுடன் வழங்கும் “வணக்கம் வட அமெரிக்கா-இயல்” உங்களுக்காக!

 

     கவிதைப்போட்டி

     கதை போட்டி

     கட்டுரைப்போட்டி

     ஓவியப்போட்டி

 

போட்டிகள் அனைத்தும் வயதிற்கு ஏற்ப நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.

 

  1. காந்தள் (5 முதல் 8 வயது வரை)
  2. முல்லை (9 முதல் 12 வயது வரை )
  3. தாமரை (13 முதல் 17 வயது வரை )
  4. தாழை (18 வயதிற்கு மேற்பட்டோர் )

நீங்கள் இந்த செய்தியை உங்கள்  தமிழ்ச்  சங்கத்தில் அறிவிப்பு செய்தாலே போதுமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பதிவு செய்து விடுவார்கள். உங்கள் சங்கத்தில் எந்த போட்டிகளையும் நடத்த வேண்டாம். இப்போட்டிகளை மாநில அளவில் (முதல், இரண்டாம்) சுற்றுகளாகவும், இறுதிச் சுற்றை பேரவை விழாவிலும் பேரவையின் “வணக்கம் வடஅமெரிக்கா – இயல்” குழு மூலம் நடத்தவிருக்கிறோம்.

 

விழாவில் வெற்றி பெறுபவருக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரபல ஆளுமைகளுடன் பயிற்சிப் பட்டறையை பேரவை ஏற்பாடு செய்யும். 

 

போட்டிகள் குறித்த விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிந்து கொள்ள, போட்டிகளில் பதிவு செய்யக் கீழ்க்காணும் சுட்டியை மட்டுமே அனைவரும் பயன்படுத்தவும்.


Registration Link: https://tinyurl.com/VVA-iyal 

 

(பதிவு செய்வதற்கான இறுதி நாள் FEB 28 2023.)

 

 

 

தத்தம் திறமைகளை, தமிழ் மொழியால் வெளிப்படுத்த காத்திருக்கும் தீரர்களை வரவேற்கிறது

‘வணக்கம் வடஅமெரிக்கா – இயல் ‘

 

இந்த நிகழ்ச்சி குறித்து கேள்விகள் இருப்பின் vva_iyal@fetna.org மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.

 

தமிழுணர்வு தழைக்க, தாய்மொழி சிறக்க 

நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவீர் !!

பரிசுகளை அள்ளி பயன் பெறுவீர்

 

 

இந்த நற்செய்தியைப் பகிர்ந்திடுங்கள், உங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள், போட்டிகளில் பதிவுசெய்து பரிசுகளை வென்றிடுங்கள்!