தமிழ் கூறும் தலைமுறை

Tamil Koorum Thalaimurai

தமிழ் கூறும் தலைமுறை

அன்புடையீர் ,


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) தமிழ் கூறும் தலைமுறை நிகழ்ச்சிக்காகச் சிறந்த பேச்சாளர்களை இந்த மாபெரும் போட்டியில் பங்கு பெற அன்புடன் வரவேற்கிறோம்.


அமெரிக்க அளவில் தமிழ் பேச்சில் சிறந்து விளங்குபவர்கள் உலக அரங்கில் நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். இதற்காகத் தமிழ்ச்சங்க அளவில், வட்டார அளவில், நாடு தழுவிய பேச்சுப் போட்டிகளைச் சென்ற வருடம் முதல் முறையாக  நடத்தியதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


தமிழ் கூறும் தலைமுறை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு  பயிற்சிப் பட்டறைகளில் நம் மாணவர்கள் மெருகேற்றப்பட்டார்கள்.


கடந்த வருட வெற்றியின் உற்சாகம்  குறையுமுன்பே  இந்த வருடப் போட்டிகளிலும் பயிற்சிகளிலும் உங்கள் ஆதரவுடன் இறங்குகிறோம்.


இதற்காக உங்கள் அமைப்புகளில் போட்டிகள் நடத்தி அல்லது உரிய முறையைப் பின்பற்றித் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்களைக் கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பவும்.


பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை இங்கே காணலாம்:

https://docs.google.com/document/d/1VdF5tdphj1-Il02L7xzC-9Bakj5Uo0huHbj95EpUaMI/edit?usp=sharing


இந்த போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தக் குறைந்த கட்டணமாக உறுப்பினர் சங்கங்கள்/ATA/ITA பள்ளி குழந்தைகளுக்கு 10 வெள்ளிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். சங்கம்/பள்ளி அல்லாது பொது நுழைவு (Open Category) குழந்தைகளுக்கு கட்டணம் 30 வெள்ளிகளாகும். மற்ற விதிகளில் மாற்றம்  இல்லை.


தமிழ்ச் சங்கம்/பள்ளி சார்பாக சிறுவர்கள் (Junior) இரண்டு பேச்சாளர்களையும் இளைஞர்களில் (Senior) இரண்டு பேச்சாளர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம்.

சங்கம்/பள்ளி அல்லாது பொது நுழைவு (Open Category) மூலம் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி படிவத்தை நிரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம.


Junior: 

10 வயது நிரம்பியவர்கள் முதல் – 14  வயது நடப்பில் உள்ளவர் வரை (2021 ஜனவரி 1 அன்று)

பிறந்த தேதி:  1 ஜனவரி 2007 முதல் 31 டிசம்பர் 2010 வரை பிறந்தவர்கள் 


Senior: 

14 வயது நிரம்பியவர்கள் முதல் – 21  வயது நடப்பில் உள்ளவர்  வரை (2021 ஜனவரி 1 அன்று)

பிறந்த தேதி:  1 ஜனவரி 2000 முதல் 31 டிசம்பர் 2006 வரை பிறந்தவர்கள் 


Registration Link: tinyurl.com/tkt2022

படிவத்தை அனுப்ப இறுதி நாள்: மார்ச் மாதம் 31-ம் 11:59 PM EST (கூடிய விரைவில் அனுப்பவும்)


உங்கள் ஆதரவுடன் நமது வெற்றி பயணம் அமெரிக்க மண்ணில் தொடரும்.


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு !


அன்புடன்,

பேரவை தமிழ் கூறும் தலைமுறை அணியினர்

தலைமை: கிங்ஸ்லி சாமுவேல்

துணைத் தலைமை: மீனா சுந்தரபாண்டியன்’

https://fetna.org/tamil-kurum-thalaimurai/

https://youtu.be/r498IoSBb9c

tamil_thalaimurai@fetna.org

அனைவர்க்கும் வணக்கம்!

பேரவையின் தமிழ் கூறும் தலைமுறை நிகழ்ச்சிக்கான போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்தன. வட அமெரிக்க அளவில் பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் இருந்து தகுதி பெற்ற 180 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியின் பயிற்சிப்பட்டறை மற்றும் போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் 10 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர் பிரிவில் இரண்டாம் கட்ட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் அமையவிருக்கும் தமிழ்கூறும் தலைமுறைக்கு வித்திட்டவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

மிக்க நன்றி!

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத்தொகை  வழங்கியவர்கள்
திருமிகு காஞ்சனா பூலா & திரு ஜாக் பூலா, நியூ யார்க்

தமிழ்கூறும் தலைமுறை - இறுதிச்சுற்று வெற்றியாளர்கள் 2021

தமிழ்கூறும் தலைமுறை - வட்டார அளவு போட்டி வெற்றியாளர்கள் 2021

அனைவருக்கும் வணக்கம்,

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் கூறும் தலைமுறையின் செல்வங்களைப் பட்டை தீட்ட, “அமெரிக்கன் பாப்பையா” அகத்தியன் ஐயா அவர்கள் வழங்கும் மேடைப் பேச்சுப் பட்டறை, வரும் சனிக்கிழமை சூன் 12, பகல் 11 மணிக்கு.

தமிழைக் கூறுவோம் தலைமுறைக்கும்!!!

அமெரிக்கன் பாப்பையா

அகத்தியன் ஜான் பெனடிக்ட்

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை நிகழ்த்திய தமிழ் கூறும் தலைமுறை நிகழ்ச்சியின், மண்டல அளவிலான சிறுவர் பிரிவு (Junior level) போட்டியில் கலந்துகொண்டுச் சிறப்பித்த அனைத்துக் குழந்தைகளுக்கும்; அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

இப்போட்டியின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வெற்றியாளர்களை உளமார வாழ்த்துகிறோம்.

நன்றி!!!

அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ள 21 சிறுவர்கள்