சங்கங்களின் சங்கமம்

Sangangalin Sangamam

302 பேரவைக்காக - சங்கங்களின் சங்கமம்

குழுவின் முக்கிய செயற்பாடுகள்

  • தமிழ்ச்சங்கங்களில் நடக்கும் தனித்துவமான நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை பிற சங்கங்களும் அறிந்து கொள்ள, காணொலிகள், மற்றும் செய்திக் கட்டுரைகள் தயாரித்துப் பகிர்ந்துகொள்ள வழிகள் செய்தல்.
  • பேரவை விழாக்களில் சங்கங்களின் சங்கம் நிகழ்ச்சிக்கு உதவி செய்தல்.
  • சங்கங்கள், பேரவை உறுப்பினர் ஆவதால் கிடைக்கும் பலன்களை ஆவணப்படுத்துதல்.
  • தமிழ்ச்சங்கங்கள், தங்கள் சிறப்புப் பணிகளை, புகைப்படம் மற்றும் காணொலிகளாக்கி, பேரவை விழாக்களில், ஒரு தனிப்பகுதியில் காட்சிப்படுத்த உதவிகள் செய்தல்

திருவள்ளுவர் சிலை

நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் தனித்துவமான நிகழ்வுகள் - நவம்பர் 2021

இக்கட்டான இந்த 2021 ஆம் ஆண்டிலும் தமிழால் தமிழுக்காகத் தமிழராய் இணையும் பல சிறப்பு நிகழ்வுகளைத் தனித்துவத்துடன் வெற்றிகரமாக வழங்கியதில் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் பேருவகை கொள்கிறது.

உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டு பிப்ரவரி 21ஆம் நாள் சிறப்பு விருந்தினர் - கவிஞர் மகுடேஸ்வரன் அவர்கள் பங்கேற்ற இலக்கிய மாலை தொடர் நடைபெற்றது.

உலக மகளிர் நாளை முன்னிட்டு மார்ச் 8ஆம் நாள் நியூ ஜெர்சி மாதர்களைச் சிறப்பிக்க, 'மகளிரைப் போற்றுவோம்' எனும் தலைப்பில் ஓர் இனிய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆட்டிசம் மற்றும் மன வள விழிப்புணர்வு ஏற்படுத்த NAMI (National Alliance on Mental Illness) உடன் இணைந்து நிகழ்த்திய 'மெய் நிகர் நெடுந்தூர நடை மற்றும் ஓட்டம்' வாயிலாக நிதி திரட்டப்பட்டது.

ஆண்டின் மிகச்சிறந்த நிகழ்வாகத் தமிழர் அறச்செறிவான திருக்குறளை அருளிய வள்ளுவப் பெருமகனார் சிலை, திரு வி.ஜி.பி. சந்தோசம் அவர்களால் வழங்கப்பெற்று நியூ ஜெர்சியில் நிறுவப்பட்டது.