Home2020-05-20T08:29:17-05:00

பேரவை அறிவிப்பு

அன்புள்ள பேரவை உறுப்பினர் தமிழ்ச்சங்கத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள்,பேரவைப் பேராளர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள், கொடையாளர்கள், மற்றும் அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் தன்னார்வத் தொண்டூழியர்கள் அனைவருக்கும் வணக்கம்.

உலகத்தையே உலுக்கும் கொரோனா நுண்தொற்றுக்கிருமி பரவுவதைத் தடுக்க நாம் அனைவரும் வீட்டிற்குள்ளே இருந்து கொண்டு நமது கடமைகளையும், பணிகளையும் செய்து கொண்டு உள்ளோம் என்பது உண்மை. அனைவரும் கவனமாக வீட்டிற்குள் இருந்து, இந்த நுண்தொற்றிலிருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் காத்துக்கொள்ளுமாறு பேரவையின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். கையறு நிலை போன்ற‌ இக்காலத்தில் இந்த நுண்தொற்றுக் கிருமி பரவாமல் இருக்க, நாமும் நமது கடமைகளைச் செய்து உதவ வேண்டும் என்பதை நாம் அறிகிறோம். எனவே இதனையொட்டி, அனைவரின் நலன் கருதி, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் செயற்குழு 2020-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 5 வரை ஜியார்ஜியா மாநிலம் அட்லாண்டா மாநகரில் நடைபெறத் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருந்த பேரவையின் 33‍-ஆம் ஆண்டு தமிழ்விழா நிகழ்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.

விழாக்குழுவும், பேரவையின் செயற்குழுவும் இணைந்து இம்முடிவினைத் தங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது.

வழக்கமான சூழலுக்கு மீண்டும் நமது வாழ்க்கைத் திரும்பியபின், 2020 பேரவை விழா பற்றிய மேலதிக விவரங்கள் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

News from FeTNA and Member Sangams

தமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்!!!

May 10th, 2018|0 Comments

டெக்சாசில் நடைபெற உள்ள பேரவையின் 31 ஆவது தமிழ் விழாவிற்கான ஏற்பாட்டு வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும்  விழாவில் இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள், [...]

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் சுற்றுச்சூழல் தீமைகளும்!

March 30th, 2018|0 Comments

ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (Sterlite Industries) எனப்படுவது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் அமைந்துள்ள தொழிற்சாலை ஆகும். இங்கு செம்புக் கம்பி, தாமிரம், கந்தக [...]

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

January 29th, 2018|0 Comments

பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பண்டிகைக் கொண்டாட்டங்கள் உங்களுக்கு இவ்வாண்டு நிறைவோடு, சீரும் சிறப்புமாக அமைய வாழ்த்துகின்றோம். நேற்று (01/24/2018) புதன்கிழமை தாய்தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் [...]

நந்தன் கதை – நாடகம்

December 7th, 2017|0 Comments

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் ஐந்தாம் ஆண்டு தமிழிசை விழா டிசம்பர் 29  வெள்ளிக்கிழமை  சென்னையில் நடை பெறுகிறது. அதில் திருபுவனம் கோ ஆத்ம நாதன் [...]

5-ஆம் ஆண்டு தமிழிசை விழா

December 7th, 2017|0 Comments

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் ஐந்தாம் ஆண்டு தமிழிசை விழா டிசம்பர் 29  வெள்ளிக்கிழமை  சென்னையில் நடை பெறுகிறது. அனைவரும் சுற்றம் சூழ வந்து சிறப்பிக்குமாறு [...]