இலக்கியக் குழு

Ilakkiya Kuzhu

இலக்கியக் குழு நடத்தும் சிறுகதைப் போட்டி 2022

போட்டிக்கான கருப்பொருள்: “அமெரிக்கக் கதைகள்”

வட அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுக்கும் முயற்சி இது. இப்போட்டிக்கான கதைக் களம் வட அமெரிக்க வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும்.

சிறுகதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31 மார்ச் 2022
போட்டி முடிவுகள் அறிவிப்பு : மே 2022
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilakkiya_kuzhu@fetna.org

நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஐந்து சிறுகதைகளுக்கு முறையே $250 (அமெரிக்க வெள்ளி) வெகுமதி அளிக்கப்படும். மேலும் ஊக்கப் பரிசாக ஐந்து சிறுகதைகளுக்குச் சிறப்புப் பரிசு உண்டு.

  1. வட அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்க முடியும்.
  2.  சிறுகதையின் மையக்கரு, வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் வாழ்நிலை, சமூகநிலை, வரலாற்று நிகழ்வுகள், பயண அனுபவங்கள், குடும்ப நிகழ்வுகள், அமெரிக்க நிகழ்வுகள்
    குடும்ப சூழல், பணியிட, தொழில், வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்வதாக இருக்க வேண்டும்.
  3. சிறுகதையின் தலைப்பு தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.சிறுகதையின் உள்ளடக்கமும் தமிழிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அதிக அயல்மொழி கலப்பு இருப்பது நடுவர்கள் முடிவில் எதிரொலிக்கும் என்பதையும் கூறிக் கொள்கின்றோம்.
  4. கதைக் களம் கண்டிப்பாக வட அமெரிக்காவில் நிகழ்வதாக இருக்க வேண்டும். பிற நிலப்பகுதியில் நடைபெறும் கதைக்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டாது.
  5. கதையின் உள்ளடக்கம் பாலின, சாதி, சமய, நிற வேற்றுமைகளை ஊக்குவிப்பதாக இருக்கக் கூடாது.
  6. சிறுகதைகள் உங்கள் சொந்த ஆக்கமாகவும், முன்னர் வெளிவராததாகவும், வேறு கதைகளைத் தழுவியதாகவும் இல்லாதிருத்தல் வேண்டும்.
  7. சிறுகதை 1500 சொற்களுக்கு குறையாமலும் 2500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் (எழுத்துரு அளவு 11 இல் இருக்க வேண்டும்). சிறுகதைக்கான படங்களை அனுப்புவது படைப்பாளியின் விருப்பம், படங்கள் சிறந்தக் கதையைத் தேர்வு செய்யும் முடிவில் தாக்கம் செலுத்தாது.
  8. வெற்றி பெறும் சிறுகதைகள் தொகுப்பாக வெளியிடப்பட வாய்ப்புள்ளதால் போட்டியில் பங்கேற்பவர்கள் இச்சிறுகதைகளை பொதுவெளியில் வெளியிடக் கூடாது.
  9. ஒருவர் இரண்டு கதைகள் வரை மட்டுமே அனுப்ப முடியும். கதைகள் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு மைக்ரோசாப்ட் வேர்ட்(Microsoft Word) கோப்பாக மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilakkiya_kuzhu@fetna.org.
  10. சிறுகதைப் போட்டியில் பங்கேற்போர் தங்கள் சுயவிவரத்தை கீழே உள்ள சுயவிவரப் படிவத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும்.
  11. சிறுகதை அனுப்பும் போது, சிறுகதை ஆசிரியரின் பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

சிறுகதைப் போட்டியில் பங்கு பெறுவோர் இந்த கூகுள் படிவத்தை நிரப்பவும்:  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdAsuGlMJOTVpUWjtUCdRKmFOC7irJqUYCRVK2xSgBxQ-T2sA/viewform?usp=pp_url

“அமெரிக்கக் கதைகள்” சிறுகதைப் போட்டிக்கான சிறப்பு இலக்கியக் கூட்டம் “புலம்பெயர் தமிழர்களின் படைப்புலகமும், சிறுகதைகளும்” எனும் தலைப்பில் நடைபெற்றது. கவிஞர் சாம்ராஜ் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்புரை வழங்கினார். சனிக்கிழமை மார்ச் 5 ஆம் நாள் இரவு 8:30 மணிக்கு( EST கிழக்கு நேரம்) இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் காணொளியை இங்கே  காணலாம்.

சிறுகதைப் போட்டி முடிவுகள்