இலக்கியக் குழு

Ilakkiya Kuzhu

சமகாலத் தமிழ் இலக்கியம் : படைப்பாளிகளும், வாசகர்களும் - எழுத்தாளர் திரு.கண்மணி குணசேகரன்

வட அமெரிக்காவில் சமகாலத் தமிழ் இலக்கியங்களை வாசிக்கவும், விவாதிக்கவும் இலக்கியக் கூட்டங்களை பேரவை நடத்தி வருகிறது.
சனிக்கிழமை, சூலை 24ம் தேதி, இரவு 8:30 மணிக்கு “சமகாலத் தமிழ் இலக்கியம் : படைப்பாளிகளும், வாசகர்களும்” என்ற தொடர் இலக்கியக் கூட்டத்தின் முதல் கூட்டத்தில் செம்புலத்துப் படைப்பாளி எழுத்தாளர் திரு.கண்மணி குணசேகரன் பங்கேற்றார்.
செம்புலம் என்று சொல்லப்படுகிற நெய்வேலி, விருத்தாச்சலம், பண்ருட்டி பகுதிகளை தன் கதைகளில் கொண்டு வருவதால் இவர் செம்புலத்துப் படைப்பாளி என அழைக்கப்படுகிறார்.
கிராமிய சூழலில் உள்ள விளிம்பு நிலைப் பெண்களின் வாழ்வியல் சிக்கல்களை இவரது “அஞ்சலை” புதினம் கதைக் களமாக கொண்டுள்ளது. “அஞ்சலை” இயல்புவாத தமிழ் இலக்கியத்தின் முக்கியமான புதினங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.
அஞ்சலை தவிர “கோரை”, “நெடுஞ்சாலை”, “வந்தாரங்குடி” போன்ற புதினங்களையும், “உயிர்த்தண்ணீர்”, “ஆதண்டார் கோயில் குதிரை” போன்ற குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் திரு.கண்மணி குணசேகரன் அவர்களின் அனைத்துப் படைப்புகளும் அமேசான் கிண்டில் புத்தகங்களாகக் கிடைக்கின்றன. அவரது புத்தகங்களை வாங்கிப் படிக்க கீழ் கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள் – https://tinyurl.com/writerkanmani

 

சமகாலத் தமிழ் இலக்கியம் : படைப்பாளிகளும், வாசகர்களும் - எழுத்தாளர் திரு. அழகிய பெரியவன்

திரு.அழகிய பெரியவன், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி. இவரது படைப்புகள் மிகவும் நுட்பமாக உழைக்கும் மக்களின் வாழ்வியலை முன்வைக்கின்றன. இவரது “தகப்பன் கொடி” புதினம் தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள் என தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை திரு. அழகிய பெரியவன் பெற்றுள்ளார்.
திரு.அழகிய பெரியவன் அவர்களின் நூல்கள் அமேசான் கிண்டில் புத்தகங்களாக கிடைக்கின்றன – https://tinyurl.com/AzhagiyaPeriyavan
 

சமகாலத் தமிழ் இலக்கியம் - எழுத்தாளரும் வாசகர்களும்

பேரவையின் இலக்கியக் கூட்டத்தில் ஈழத்து  எழுத்தாளர், கவிஞர் திரு. தீபச்செல்வன் அவர்கள் சிறப்புரை.