இலக்கிய குழு

Ilakkiya Kulu

இசைத்தமிழ் வளர்த்த பாணர் வரலாறு பேரவையின் இலக்கிய கூட்டம்

சனவரி 2 ஆம் நாள் சனிக்கிழமை,கிழக்குநேரம் இரவு 8.30 மணிக்கு கலந்து கொள்ளுங்கள்!

2500 ஆண்டு கால பாணர்தம் தொன்று தொட்ட வரலாறு காண வாருங்கள்! http://tinyurl.com/fetna2020ik

பேரவையின் முகநூல் இணைப்பை like செய்து பேரவை நிகழ்ச்சி குறித்த தகவலை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் https://www.facebook.com/fetnaconvention

இதற்கு முந்தைய இலக்கியக் கூட்டங்களின் காணொளியை கீழ் காணும் இணைப்பில் சென்று பார்க்களாம்

இலக்கியக் கூட்டம் : சமகாலத் தமிழ் இலக்கியம் : படைப்பாளிகளும், வாசகர்களும்

சமகாலத் தமிழ் இலக்கியங்களை வட அமெரிக்காவில் வாசிக்கவும், விவாதிக்கவும், சமகாலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளும் வாசகர்களும் கலந்துரையாடும் நிகழ்ச்சியாக “சமகாலத் தமிழ் இலக்கியம் : படைப்பாளிகளும், வாசகர்களும்” என்ற தொடர் கூட்டங்களை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் குழு நடத்த உள்ளது. இத் தொடர் கூட்டத்தில் பங்கேற்க வட அமெரிக்க இலக்கிய வாசகர்களை அழைக்கிறோம்..இந்த வகை கூட்டங்களில் வாசகர்களும் , எழுத்தாளர்களும் இணைந்து உரையாட முக்கியத்துவம் அளிக்கப்படும்

“சமகாலத் தமிழ் இலக்கியம் : படைப்பாளிகளும், வாசகர்களும்” கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில் எழுத்தாளர் திரு.கண்மணி குணசேகரன் பங்கேற்கிறார். செம்புலத்துப் படைப்பாளி என அழைக்கப்படுகிற இவர், செம்புலம் என்று சொல்லப்படுகிற நெய்வேலி, விருத்தாச்சலம் பகுதிகளை தன் கதைகளில் கொண்டு வரும் புத்திலக்கிய எழுத்தாளர்.

கிராமய சூழலில் உள்ள விளிம்பு நிலைப் பெண்களின் வாழ்வியல் சிக்கல்களை இவரது “அஞ்சலை” புதினம் கதைக் களமாக கொண்டுள்ளது. அஞ்சலை என்ற ஒரு சராசரி கிராமத்துப் பெண், தான் வாழும் சூழலில் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களை இந்தப் புதினம் பேசுகிறது. “அஞ்சலை” இயல்புவாத தமிழ் இலக்கியத்தின் முக்கியமான புதினங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

அஞ்சலை தவிர “கோரை”, “நெடுஞ்சாலை”, “வந்தாரங்குடி” போன்ற புதினங்களையும், “உயிர்த்தண்ணீர்”, “ஆதண்டார் கோயில் குதிரை” போன்ற குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகளையும், “தலைமுறை கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” போன்ற கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் திரு.கண்மணி குணசேகரன் அவர்களின் அனைத்துப் படைப்புகளும் அமேசான் கிண்டில் புத்தகங்களாகக் கிடைக்கின்றன. அவரது புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் – https://tinyurl.com/writerkanmani

எழுத்தாளர்களுடன் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க வட அமெரிக்க இலக்கிய வாசகர்களை அழைக்கிறோம்.

செம்புலத்துப் படைப்பாளி

திரு .கண்மணி குணசேகரன்

எழுத்தாளர்

சூம் நேரலை – Zoom Live
https://tinyurl.com/FeTNA2020ik
Meeting ID : 954 1812 2755