BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//FeTNA - ECPv6.18.4.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:FeTNA
X-ORIGINAL-URL:https://fetna.org
X-WR-CALDESC:Events for FeTNA
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/New_York
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20250309T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20251102T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20260308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20261101T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20270314T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20271107T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260214
DTEND;VALUE=DATE:20260215
DTSTAMP:20260209T203654Z
CREATED:20260209T201359Z
LAST-MODIFIED:20260209T203654Z
UID:5739-1771027200-1771113599@fetna.org
SUMMARY:சிறுகோட்டுப் பெரும்பழம்:சங்க இலக்கியத்தில் காதல் - கவிஞர் சக்தி ஜோதி
DESCRIPTION:உயிர் சிறிது; காதலோ பெரிது!! (குறுந்தொகை:18) \nவேரல் வேலி வேர்க்கோட் பலவின்\nசாரல் நாட! செவ்வியை ஆகுமதி!\nயார்அஃது அறிந்திசி னோரே\, சாரல்\nசிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவள்\nஉயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!\n-கபிலர். \nகாதல் என்பது வெறும் உணர்வோ செயலோ அல்ல\, அது ஒரு நாகரிகத்தின் அடையாளம். எந்த சமூகம் காதலை கொண்டாடுகிறதோ\, அந்த சமூகமே உயர்ந்த நாகரிகம் கொண்டதாக இருக்கும். மனித குலத்தின் ஆதி நிலங்களுள் ஒன்றென சொல்லப்படும் தமிழ் நிலமானது\, உயிர்களின் அடிப்படை உணர்வான அன்பின் மீது கட்டமைக்கப்பட்ட சமூகமாகவே தோன்றி நிலைப்பெற்றுள்ளது. சங்ககால தமிழ் சமூகம் பொருள்முதல்வாத சமூகமாக இருந்தது. அதனால்தான் அவர்களால் காதலை உயர்வாக போற்ற முடிந்தது. களவும்\, கற்பும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளாக இருந்தன. தமிழர்கள் காதலை வெறும் உணர்வாக மட்டும் பார்க்கவில்லை. அதை மிக நுட்பமாக வகைப்படுத்தி\, ஐந்திணைகளாக பிரித்தனர். சங்க இலக்கியங்களின் அகப்பாடல்கள் அன்பின் முதிர்ச்சிகளாகிய காதற் பாடல்களாகும். உலகக் காதலர் அனைவருக்கும் உரியவையாகும். இதுவரை கண்டெடுக்கப்பட்ட 2381 சங்கப் பாடல்களில்\, 1862 பாடல்கள் அகத்திணைப் பாடல்களாக உள்ளன. இது மொத்த பாடல்களில் 78% என்ற அளவிற்கு காதல் பாடல்கள் இருப்பதைக் காட்டுகிறது. இந்த புள்ளிவிவரமே சங்ககால தமிழர்கள் காதலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சங்ககால தமிழ்ச் சமூகம் காதலை ஒரு பண்பாட்டு அடையாளமாகக் கொண்டாடியது. குறுந்தொகையில் வரும் இந்த பாடல் அதை உணர்த்துகிறது: \n“யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” \nகாதலைக் கொண்டாடும் இம்மாதத்தில் “சிறுகோட்டுப் பெரும்பழம் – சங்க இலக்கியத்தில் காதல்” என்ற தலைப்பில் கவிஞர் சக்தி ஜோதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். \nசங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கவிஞர் சக்தி ஜோதி 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி\, 2025 ஆம் ஆண்டில் “திருக்காட்சி” என்ற கவிதை நூல் வரை இதுவரை பதினைந்து கவிதைத் தொகுப்புகளையும்\, 2026 ஆம் ஆண்டில் “சங்க இலக்கியம்-உடல் மனம் மொழி என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். சங்கப் பாடல்கள்\, நவீன இலக்கியம்\, நீர் மேலாண்மை\, கல்வி\, சுற்றுச்சூழல்\, விவசாயம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார். பெண்ணையும் இயற்கையையும் இணைத்து கவிதைகள் படைப்பது இவரது பலமாகும். சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம்\, சமூக ஊடகம் வரையிலான பார்வையுடன் இவரது கட்டுரைகள் அமைந்துள்ளன. தமிழ் இலக்கியத்தில் இவரது பங்களிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். \nசங்க இலக்கிய காதல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இம்மாத இலக்கியக்கூட்டத்தில் இணைந்திருங்கள். \nநாள்: பிப்ரவரி 14\, சனிக்கிழமை\nஅமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி\nஇந்திய நேரம்: இரவு 9.30 மணி\nZoom: https://fetna.org/ilakkiyam-online\nYT Live: http://fetna.org/ytlive\nFB Live: http://fetna.org/fblive \nநன்றி.
URL:https://fetna.org/event/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:FeTNA Event
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20260228T000000
DTEND;TZID=America/New_York:20260321T235900
DTSTAMP:20261110T173522Z
CREATED:20260218T212243Z
LAST-MODIFIED:20261110T173522Z
UID:5819-1772236800-1774137540@fetna.org
SUMMARY:ஆறாம் திணை -கவிதைப் பட்டறை
DESCRIPTION:ஆறாம் திணை -கவிதை மற்றும் சிறுகதை தொகுப்பு வெளியீடு\n\n\nஇடம்\, மொழி\, கலை\, பண்பாடு\, காலநிலை எனப் பலவற்றாலும் அந்நியப்பட்டிருக்கின்ற ஒரு நிலத்தில் வேரற்ற கொடி போலப் படரும் வாழ்வைக் குறித்து எழுதுவதும்\, புலம்பெயர் நிலத்துடன் உரையாடல் நிகழ்த்துவதும் அவசியமாகின்றது.\n\n\nபுலம்பெயர் வாழ்வியலில்\, சமூக இடம்\, பண்பாட்டு மாற்றங்கள்\, புலம்பெயர் மண்ணின் நிகழ்வுகள்\, பண்பாட்டு அதிர்வுகள் முதலானவற்றை மையப்படுத்தி வெளியாகும் வட அமெரிக்கப் புலம்பெயர் இலக்கியம்\, தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கிய இடம் வகிக்குமென்பதில் ஐயமில்லை.\n\n\nபுலம்பெயர் வாழ்வியலை ஆவணப்படுத்த வட அமெரிக்கத் தமிழர்களிடம் இருந்து சிறுகதைகள்/கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.\n\n\nபுலம்பெயர் வாழ்வியலைக் கருவாகக் கொண்டு எழுதப்படும் கவிதைகள்/சிறுகதைகள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டு\, நியூசெர்சி நகரில் நடைபெற இருக்கும் 39-ஆவது பேரவை விழாவில் தொகுப்பாக வெளியிடப்படும்.\n\n\nஇதையொட்டி பேரவை இலக்கியக்குழுவின் சார்பாக வடஅமெரிக்க வாசகர்களுக்கும்\, புதிதாக எழுத வருபவர்களுக்கும் கவிதை மற்றும் சிறுகதை இணைய பயிற்சி முகாம்கள் நடைபெற இருக்கின்றன. கவிதை பயிற்சி முகாமில் கவிஞர் சுகிர்தராணி மற்றும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் கலந்துகொண்டு கவிதை எழுதுவதன் நுட்பங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள உள்ளனர். சிறுகதை பயிற்சி முகாமில் எழுத்தாளர் குணா கந்தசாமி மற்றும் எழுத்தாளர் திருச்செந்தாழை கலந்து கொண்டு கதை எழுதுவதில் உங்கள் சிந்தனையை சிறந்த முறையில் வெளிப்படுத்திடும் உத்திகளை பகிர உள்ளனர்.\n\n\nகவிதை மற்றும் கதை எழுதிட ஆர்வமுள்ள வட அமெரிக்க வாழ் தமிழர்களை அன்புடன் அழைக்கிறோம். பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த இணைய பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முடியும்.\n\n\nபதிவு செய்வதற்கான இணைப்பு:\n\n\nகவிதை பட்டறை : https://tinyurl.com/KavithaiThinai\n\n\nசிறுகதை பட்டறை : https://tinyurl.com/Sirukathai2026\n\n\nபதிவு செய்வதற்கான கடைசி நாள் : பிப்ரவரி 25\, 2026\n\n\nஇணைய பயிற்சி முகாம் நடைபெறும் நாட்கள்:\n\n\nகவிதை : பிப்ரவரி 28\, மார்ச் 21\n\n\nசிறுகதை : மார்ச் 1 மற்றும் மார்ச் 22\n\n\nபடைப்புகளை அனுப்பி வைக்கக் கடைசிநாள்: ஏப்ரல் 15\, 2026\n\n\nவிதிமுறைகளை அறிந்து கொள்ள\, படைப்புகளை அனுப்பி வைக்க:\nhttps://tinyurl.com/AaraamThinai2026\n\n\nhttps://fetna-convention.org/\n\n\nஇன்றே பதிவு செய்வீர் !!\n\n\nபயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயனடைவீர் !!\n\n\nநன்றி
URL:https://fetna.org/event/%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1/
CATEGORIES:FeTNA Event
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
END:VCALENDAR