BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//FeTNA - ECPv6.15.17.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:FeTNA
X-ORIGINAL-URL:https://fetna.org
X-WR-CALDESC:Events for FeTNA
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/New_York
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20240310T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20241103T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20250309T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20251102T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20260308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20261101T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20270314T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20271107T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20250920T210000
DTEND;TZID=America/New_York:20250920T223000
DTSTAMP:20260403T191441
CREATED:20251017T050315Z
LAST-MODIFIED:20251017T050315Z
UID:4855-1758402000-1758407400@fetna.org
SUMMARY:தமிழிசை நிகழ்ச்சி நாட்டுப்புற இசையில் பண்ணிசை
DESCRIPTION:
URL:https://fetna.org/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20250921T110000
DTEND;TZID=America/New_York:20250921T130000
DTSTAMP:20260403T191441
CREATED:20251017T050048Z
LAST-MODIFIED:20251017T050048Z
UID:4852-1758452400-1758459600@fetna.org
SUMMARY:மொழிபெயர்ப்பு இலக்கியமும் எல்லைக் கடந்த மானுடமும்
DESCRIPTION:
URL:https://fetna.org/event/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81/
LOCATION:Virtual
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20250925T193000
DTEND;TZID=America/New_York:20250925T210000
DTSTAMP:20260403T191441
CREATED:20251017T050552Z
LAST-MODIFIED:20251017T050552Z
UID:4858-1758828600-1758834000@fetna.org
SUMMARY:Legal Insights on IMMIGRATION POLICIES
DESCRIPTION:
URL:https://fetna.org/event/legal-insights-on-immigration-policies/
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20251025T110000
DTEND;TZID=America/New_York:20251025T130000
DTSTAMP:20260403T191441
CREATED:20251024T021736Z
LAST-MODIFIED:20251024T145636Z
UID:5339-1761390000-1761397200@fetna.org
SUMMARY:மாதாந்திர இலக்கியக் கூட்டம் (இணையவழி) - சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள்
DESCRIPTION:மனித வரலாறும்\, இருப்பும் தீராத கதைகளினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு சரித்திரம் கொண்ட தமிழ்ச் சிறுகதையின் வரலாறு மரமொன்று பெண்ணொருத்தியின் கதையைச் சொல்வதில் தொடங்கியது. சிறுகதையின் வடிவமும்\, பேசுபொருளும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகிறது. எதிர்பாராத முடிவை நோக்கிய நிலையிலியிலிருந்து\, காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வை வாசகனின் கற்பனைக்கு விடும் புதிய வடிவங்களுக்குள் சிறுகதை தன்னைத் தானே மறுவடிவமைத்துக் கொள்ள\, மீறல்கள் வழியே அதன் எல்லைகள் விரிந்தபடியே உள்ளன. தமிழைப் பொறுத்தவரை நவீனத்துவ எழுத்தின் முதன்மை முகமாக அறியப்படும் புதுமைப்பித்தனில் துவங்கி சிறுகதை இலக்கிய வடிவத்தில் கவனத்துடன் ஈடுபட்டு சமகாலத்தின் குரல்களாக விளங்குகிற இன்றைய இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் வரை தமிழ் சிறுகதைகளின் மரபு வலுவாகவே உள்ளது.\nபேரவையின் இம்மாத இலக்கியக்கூட்டத்தில் “நவீன தமிழ்ச் சிறுகதைகள் – தனித்தன்மை மிக்க குரல்கள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு எம். கோபாலகிருஷ்ணன் அவர்களும் “தற்கால தமிழ்ச் சிறுகதைகள் – தொடக்கமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் திருமிகு லாவண்யா சுந்தரராஜன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். \nஎம்.கோபாலகிருஷ்ணன் தமிழின் முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவர். சிறுகதை\, நாவல்\, கட்டுரை\, விமர்சனம் ஆகிய துறைகளில் இயங்கி வருகிறார். நெசவாளர்குடிகளின் புலம்பெயர்தல் பற்றிய அவருடைய அம்மன்நெசவு தொன்மத்திலிருந்து சமகால வாழ்க்கை வரை நீடிக்கும் சிறந்ததொரு படைப்பு. திருப்பூர் தொழில்மயமாவதன் பின்னணியில் வெவ்வேறு இளைஞர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாறுதல்கள் நிகழ்கின்றன என்பதை விவரிக்கும் மணல்கடிகை தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று என்று குறிப்பிடப்படுகிறது.\nபிறிதொரு நதிக்கரை முதல் சக்தியோகம் வரை பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார். இவர் “கதா” தேசிய விருது\, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது\, தஞ்சை பிரகாஷ் நாவல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். \nலாவண்யா சுந்தரராஜன் தமிழ் கவிஞர்\, எழுத்தாளர். கவிதை\, சிறுகதை\, நாவல்\, கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். நீர்கோல வாழ்வை நச்சி கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமானார். குழந்தையின்மையை மையமாகக் கொண்ட காயாம்பூ நாவல் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. பெண்களின் அனுபவங்கள்\, நகர வாழ்க்கையின் உளவியல் நெருக்கடிகள்\, மற்றும் அடையாளப் பிரச்சினைகள் ஆகியவை அவரது படைப்புகளில் பிரதான இடம் பெறுகின்றன. \nவாசகர்கள்\, இலக்கிய ஆர்வலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் அழைக்கிறோம்.\nநாள்: அக்டோபர் 25\, சனிக்கிழமை\nஅமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி\nஇந்திய நேரம்: இரவு 8.30 மணி \nZoom: https://fetna.org/ilakkiyam-online\nYT Live: http://fetna.org/ytlive\nFB Live: http://fetna.org/fblive \nஇலக்கியக்குழு\,\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
URL:https://fetna.org/event/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20251115T110000
DTEND;TZID=America/New_York:20251115T130000
DTSTAMP:20260403T191441
CREATED:20251127T010349Z
LAST-MODIFIED:20251127T010349Z
UID:5521-1763204400-1763211600@fetna.org
SUMMARY:போர் நிலம் பேசிய கதைகள்
DESCRIPTION:அந்தந்த காலத்தின் வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் மாபெரும் பொறுப்பை இலக்கியத்தின் பக்கம் விட்டுச் சென்றிருக்கிறது காலம். முதல் உலகப்போரில் ஆரம்பித்து ஏராளமான இன அழிப்புகள் உலகெங்கிலும் நடைபெற்றுள்ளன. சாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான பக்கங்களை\, மனித உரிமை மீறல்களை சாட்சியங்களாக/ஆவணங்களாக எழுத்துகள் தான் சுமந்து நிற்கின்றன. அந்தவகையில் யுத்தச்சூழலும் இனவாதமும்\, தமிழின் இலக்கிய முகத்தையே மாற்றியிருக்கிறது. போர் நிலங்கள் இதுவரை தமிழ் இலக்கியம் உணராத கொடூர அனுபவங்களை முன்வைக்கின்றன. யுத்த நெருக்கடிகளில் கிடந்து உயிருக்காக அவர்கள் பட்ட அவமானங்கள்\, வேறொரு இனம் சந்தித்திராத ஒன்று. யுத்தச்சூழலுக்குள் கடும் இன்னல்களைக் கண்ட தமிழினத்திலிருந்து இலக்கியமும் எழுந்து வளர்ந்துள்ளது.\nசொந்த நிலத்தில் அன்னியப்படுத்தப்பட்டும்\, ஒதுக்கப்பட்டும்\, துரத்தப்பட்டும் ஒவ்வோரு நிலத்தின் நிலை வாசலில் ஏதிலிகளாக நிற்கும் ஈழஅகதி மக்களின் துயரங்கள் ஒருபுறம்; அடைக்கலம் என்கிற பெயரில் முகாம்களில் அடைப்பட்ட அடிமை வாழ்வில் கலவரப்படுத்தும் மனிதர்களை அடையாளப்படுத்தியும்\, முகாமில் சனங்கள் எதிர்கொள்ளும் துயர் சூழ் வாழ்க்கை மறுபுறம் என யுத்தகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்களுக்குச் சொல்ல ஏராளமான கதைகள் இருக்கின்றன.\nபேரவையின் நவம்பர் மாத இலக்கியக்கூட்டத்தில் “போர் நிலம் பேசிய கதைகள்” என்ற தலைப்பில் ஈழ இலக்கியங்கள் குறித்து உரையாற்ற ஈழத்திலிருந்து கவிஞர்/எழுத்தாளர் தீபச்செல்வனும்\, எழுத்தாளர் சர்மிலா வினோதினியும் நம்மிடையே கலந்துகொள்ள இருக்கின்றனர்.\nஈழப்போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதி வருபவரும்\, ஈழநிலத்தின் வாழ்வையும்\, வலிகளையும்\, உரிமைகளையும் தன் கவிதைகளில் தொடர்ந்து எழுதி வரும் சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியுமான திரு தீபச்செல்வன் “எழுத்து எனக்கு ஆயுதம்” என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்.\nபதுங்கு குழியில் பிறந்த குழந்தை\, ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\, பாழ் நகரத்தின் பொழுது\, ஈழம் மக்களின் கனவு\, ஈழம் போர்நிலம்\, கிளிநொச்சி போர்தின்ற நகரம்\, எதற்கு ஈழம்?\, எனது குழந்தை பயங்கரவாதி\, எனது நிலத்தை விட்டு எங்குச் செல்வது? நான் ஸ்ரீலங்கன் இல்லை\, பயங்கரவாதி\, பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல போன்ற பல நூல்களை தீபச்செல்வன் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய “நடுகல்” நாவல்\, சமகாலத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் ‘சயனைட்’ என்ற இவரது நாவல் வெளிவந்திருக்கிறது. தன்னுடைய படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் தீபச்செல்வன் பெற்றுள்ளார்.\nபோர் நிலங்களில் பெண்கள்\, குழந்தைகளின் துயரங்கள் சொல்லி மாளாதவை. இதுவரை ஈழ இலக்கியங்களில் பேசப்பட்ட பெண்கள்\, குழந்தைகளின் துயரங்கள் குறித்தும்\, ஈழ நிலத்தில் எழுத வந்த பெண் எழுத்து குறித்தும் “ஈழப்போர் நிலத்தில் பெண்ணெழுத்துகள்“ என்ற தலைப்பில் எழுத்தாளர்/ஊடகவியலாளர் திருமிகு சர்மிலா வினோதினி அவர்கள் உரையாற்றவிருக்கிறார். சர்மிலா அவர்களது அகதியின் நாட்குறிப்பு நூல் சமீபத்தில் வெளியானது. மேலும் இராப்பாடிகளின் நாட்குறிப்பு\, மகளின் வாசம் என்ற இருகவிதைத் தொகுப்புகளும்\, மொட்டைத்தலையும் முகமாலைக் காத்தும் என்ற சிறுகதைத்தொகுதியும் வெளியாகி இருக்கிறது. சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட இத்தொகுப்பு இலங்கை அரசின் சாகித்திய விருதைப் பெற்றுள்ளது.\nபோர் நிலம் பேசிய கதைகள் பற்றி அறிந்து கொள்ள வாசகர்கள்\, இலக்கிய ஆர்வலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் அழைக்கிறோம். \nநாள்: நவம்பர் 15\, சனிக்கிழமை\nஅமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி\nஇந்திய/இலங்கை நேரம்: இரவு 9.30 மணி \nZoom: https://fetna.org/ilakkiyam-online\nYT Live: http://fetna.org/ytlive\nFB Live: http://fetna.org/fblive
URL:https://fetna.org/event/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20251127T210000
DTEND;TZID=America/New_York:20251127T230000
DTSTAMP:20260403T191441
CREATED:20251127T010601Z
LAST-MODIFIED:20251127T010601Z
UID:5523-1764277200-1764284400@fetna.org
SUMMARY:மாவீரர் நாள் நினைவேந்தல்
DESCRIPTION:வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பாக “மாவீரர் நாள் நினைவேந்தல்\,” வரும் மாவீரர் நாளான நவம்பர் 27-ஆம் நாள்\, அமெரிக்க கிழக்கு சீர்தர நேரம் இரவு 9 மணிக்கு இணையம் வழியாக நடைபெற உள்ளது. நம் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக வீரச்சாவு அடைந்த மாவீரர்களுக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படும். இந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற ஈழத்தில் இருந்து வழக்கறிஞர் திரு நடராசர் காண்டீபன் அவர்களும்\,கனடாவில் இருந்து தமிழாசிரியர் திருமிகு கோதை அமுதன் அவர்களும் இணைகிறார்கள். இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம். \nநாள்: நவம்பர் 27\, வியாழக்கிழமை\nஅமெரிக்க கிழக்கு நேரம்: இரவு 9 மணி\nஇந்திய/இலங்கை நாள் & நேரம்:\nநவம்பர் 28\, வெள்ளிக்கிழமை காலை 7:30 மணி \nஇணைய உரலிகள்:\nZoom: https://fetna.org/maaveerarnaal\nYT Live: http://fetna.org/ytlive\nFB Live: http://fetna.org/fblive
URL:https://fetna.org/event/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20251207T093000
DTEND;TZID=America/New_York:20251207T223000
DTSTAMP:20260403T191441
CREATED:20251207T055450Z
LAST-MODIFIED:20251207T055450Z
UID:5569-1765099800-1765146600@fetna.org
SUMMARY:பன்னாட்டுத் தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டுத் துவக்கவிழா
DESCRIPTION:FiTEN-2026 Curtain Raisers ceremony \nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு (FiTEN) மதுரையைத் தொடர்ந்து “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” எனும் சிறப்பைக் கொண்ட கோவை மாநகரில் எதிர்வரும் (2026) சனவரி 17-ஆம் நாள் நடைபெற உள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. \nஅதன் துவக்க விழா நாளை காலை 9:30 மணிக்கு (அமெரிக்க கிழக்கு சீர்தர நேரம்) இணையவழியில் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் நியூசெர்சியிலுள்ள புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களுள் ஒன்றான Somerset Pharma LLC நிறுவனத்தின் தலைவர்\, முதன்மை செயல் அதிகாரி முனைவர் வீரப்பன் சுப்ரமணியன் மற்றும் நகரங்களில் போக்குவரத்தை எளிதாக்க மின்சாரத்தில் இயங்கும் விமானங்களை AI (செயற்கை நுண்ணறிவு) பயன்படுத்தித் தயாரிக்கும் ePlane\,ai நிறுவனத்தின் நிறுவனர்\, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் திரு சத்யா சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்து சிறப்புரையாற்றி விழாவைத் துவக்கி வைக்க உள்ளனர். \nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் திரு விஜய் மணிவேல்\, தொழில் முனைவோர் மாநாட்டு (FiTEN) ஒருங்கிணைப்பாளர் திரு சின்னசாமி பாப்பணன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி தங்கராசு ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.\nஅனைவரும் பங்கு கொண்டு உற்சாக வரவேற்பு தர அன்போடு கேட்டுக் கொள்கிறோம். \nநாள் : டிசம்பர் 7\, 2025 ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 9:30 மணி (அமெரிக்க கிழக்கு சீர்தர நேரம்)\nமுன்னிரவு 8:00 மணி (இந்திய சீர்தர நேரம்) \nஇணைய உரலிகள்: \nYT Live URL: http://fetna.org/live\nFB Live URL: http://fetna.org/fblive \nWe are thrilled to announce that our FiTEN 2026 soft launch ceremony will take place online tomorrow at 9:30 AM (Eastern Standard Time). Dr. Veerappan Subramanian\, President and CEO of Somerset Pharma LLC\, a renowned pharmaceutical manufacturing and marketing company in New Jersey\, and Mr. Satya Chakravarthy\, Founder of ePlane\, a company that uses AI (Artificial Intelligence) to make urban transportation easier\, and Professor at the Indian Institute of Technology\, Chennai\, will jointly inaugurate the ceremony with keynote speeches.\nMr. Vijay Manivel\, President\, Federation of Tamil Sangams of North America\, Mr. Chinnasamy Papanan\, Coordinator- FiTEN\, and Ms. Shanthi Thangaraj\, Joint Coordinator- FiTEN\, will also participate and grace the occasion.\nWe cordially invite everyone to participate and give a warm welcome. \nDate: Sunday\, December 7\, 2025\nTime: 9:30 AM (Eastern Standard Time)\n8:00 AM (Indian Standard Time) \nLinks to join:\nYT Live URL: http://fetna.org/live\nFB Live URL: http://fetna.org/fblive \nநன்றி\nதகவல் தொடர்புக் குழு\,\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.
URL:https://fetna.org/event/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251220
DTEND;VALUE=DATE:20251221
DTSTAMP:20260403T191441
CREATED:20251219T042700Z
LAST-MODIFIED:20251219T042559Z
UID:5599-1766188800-1766275199@fetna.org
SUMMARY:மானுடம் வென்ற கதைகள் - எழுத்தாளர் பிரபஞ்சன்
DESCRIPTION:வணக்கம்! \nமானுடம் வென்ற கதைகள் – எழுத்தாளர் பிரபஞ்சன் \n“மனிதன் சக மனிதன்பால் அன்பு செலுத்த வேண்டும். எனில் மனிதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி எனில் அவன் தன்னைத் தானே புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்ஙனம் மனிதன் தன்னை அறிவதற்கு கலையும் இலக்கியமும் மிகப் பெரும் துணையாய்\, ஒரு நல்ல சினேகிதனாய் நிற்கும் என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்”- பிரபஞ்சன் \nதான் வாழ்ந்த காலம் வரை தன் எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களிடையே உரையாடிக் கிடந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன். எழுத்தால் என்ன செய்துவிடமுடியும்; எழுத்து எதைக் கொடுக்கும் என்பதைப் பற்றிய சலனங்களின்றி வாழ்நாள் முழுக்க எழுத்தாளராகவே வாழ்ந்தவர் பிரபஞ்சன். மனிதரின் மனதுக்குள் பொதிந்திருக்கும் உணர்வுகளை\, ரகசியங்களை தன் பாத்திரங்களின் வழியே உரையாடியவர். நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் அவர் படைத்த பாத்திரங்கள் பலருக்கும் நெருக்கமானவை. அவரின் கதைகளில் பெரும்பாலும் குரலற்றவர்களின் பாத்திரங்கள் நிறைந்து நிற்கும். அவர்களின் காதல்\, ப்ரியம்\, ரகசியம்\, துயரம்\, நுண்ணுணர்வுகள் இவற்றைச் சார்ந்தே அவரது புனைவுலகம் நிறைந்திருக்கும். `ஒரு மனுஷி’ \, `மரி என்கிற ஆட்டுக்குட்டி’\, `அப்பாவின் வேஷ்டி’ என இவரின் பல சிறுகதைகள் அதற்கு சாட்சியமாக உள்ளன. பிரபஞ்சனுக்கு சங்க இலக்கியங்கள் மீதான ஈர்ப்பு எப்போதும் உண்டு. இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் தமிழின் சங்க இலக்கியம் சார்ந்து ஓர் ஆய்வு செய்யவிரும்புவதாகத் தெரிவித்திருந்தார். ‘வானம் வசப்படும்’\, ‘மானுடம் வெல்லும்’\, ‘இன்பக் கேணி’\, ‘நேசம் மறப்பதில்லை’ என மொத்தம் நான்கு வரலாற்று நாவல்களையும் எழுதியுள்ளார். மகாநதி\, நீலநதி\, திரை\, ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்\, சித்தன் போக்கு\, காகித மனிதர்கள்\, சந்தியா\, ஒரு மனிஷி\, மரி என்கிற ஆட்டுக்குட்டி போன்ற அவரது நாவல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பிரபஞ்சனின் படைப்புகள் இந்தி\, கன்னடம்\, தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலும்\, ஜெர்மன்\, பிரெஞ்சு\, ஆங்கிலம்\, சுவீடிஷ் போன்ற பன்னாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. \nஎழுத்துலகில் தன் கனிவான சொற்களால் அன்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவுதினத்தை ஒட்டி டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இலக்கியக்கூட்டத்தில் அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள்\, எழுத்தாளர்கள் அவரைப் பற்றிய நினைவுகளையும்\, அவருடைய எழுத்துகளைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர். \nஅன்பு என்ற ஒற்றைச் சொல்தான் அவர் வாழ்க்கை. பிறருக்கு நம்பிக்கை தரும் எழுத்துகளை எப்போதும் கொடுத்தது மட்டுமல்லாமல் அதைத் தன் வாழ்க்கையிலும் சுமந்து சென்றவர் பிரபஞ்சன் என அவருடனான தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் தமயந்தி\, கவிஞர்\, எழுத்தாளர்\, ஊடகவியலாளர்\, திரைப்பட பாடலாசிரியர்\, இயக்குநர் என பன்முகம் கொண்டவர். பெண்களின் அக உலகு குறித்து அக்கறையுடன் பதிவு செய்து வருபவர். தமயந்தி அவர்களின் நிழல் இரவு குறிப்பிடத்தக்க நாவல். என் பாதங்களில் படரும் கடல் என்ற கவிதைத் தொகுப்பையும்\, இந்த நதி நனைவதில்லை\, வல்லமை தாராயோ போன்ற கட்டுரைத்தொகுதிகளையும்\, பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தமயந்தி இயக்கிய ஆவணப்படங்கள் குறிப்பிடத்தகுந்தவை. தற்போது அவர் இயக்கி வெளிவந்துள்ள படம் காயல். \nபிரபஞ்சனோடு மிக நெருங்கிப் பழகியவர்களுக்குதான் தெரியும்\, அவர் எவ்வளவு உன்னதமான மனிதர் என்று. அவருடைய எழுத்துக்கும் குணத்துக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. அவரின் கதைகளை ஆழ்ந்து படிப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும்\, அவர் கதைகளில் கெட்டவர்களே கிடையாது என்று என்று பிரபஞ்சனுடனான தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் பாஸ்கர் சக்தி\, எழுத்தாளர்\, திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர். பாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா என்ற தொகுப்பாக வெளிவந்தது. காற்று வளையம்\, பூவரசம் வீடு போன்ற நாவல்களும் கடலோரக் கிளிஞ்சல்கள் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 2024 ல் இவர் இயக்கி வெளி வந்த படம்\, ரயில். \nபிரபஞ்சன் அவர்களின் இறுதி நாட்களில் உடனிருந்தவர் பி.என்.எஸ். பாண்டியன். இவர் பத்திரிகையாளர்\, எழுத்தாளர்\, ஆவணப்பட இயக்குநர்\, மற்றும் சமூக ஆர்வலர். எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் நெருங்கிய நண்பரான பாண்டியன்\, பிரபஞ்சன் அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்படுகிறார்\, இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. ‘ஊரடங்கு உத்தரவு: புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு’ இவரின் குறிப்பிடத்தக்க கட்டுரைத் தொகுப்பு. புதுச்சேரியின்\nதற்கால அரசியல் வரலாற்றை ஆய்வு செய்து வருகிறார். \nஎழுத்தாளர் பிரபஞ்சன் கதைகள் மற்றும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இம்மாத இலக்கியக்கூட்டத்தில் இணைந்திருங்கள். \nநாள்: டிசம்பர் 20\, சனிக்கிழமை\nஅமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி\nஇந்திய நேரம்: இரவு 9.30 மணி \nZoom: https://fetna.org/ilakkiyam-online\nYT Live: http://fetna.org/ytlive\nFB Live: http://fetna.org/fblive \nநன்றி.
URL:https://fetna.org/event/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81/
LOCATION:Virtual
CATEGORIES:FeTNA Event
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251229
DTEND;VALUE=DATE:20251230
DTSTAMP:20260403T191441
CREATED:20251229T210524Z
LAST-MODIFIED:20260209T211154Z
UID:5750-1766966400-1767052799@fetna.org
SUMMARY:பேரவையும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் தமிழிசை விழா
DESCRIPTION:  \n\nதமிழிசை விழா அழைப்பிதழ்\n\n\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் தமிழிசை விழாவின் 13-ஆவது விழா\, டிசம்பர் 29ஆம் நாள் சென்னையில் நடைபெற உள்ளது. இசை ஆர்வலர்கள் அனைவரையும் பேரவை சார்பில் அன்போடு அழைக்கிறோம்.\n\n\nநாள் : திங்கட்கிழமை\, டிசம்பர் 29\, 2025\n\n\nநேரம் : காலை 9 மணிமுதல்\n\n\nஇடம் : பசும்பொன் தேவர் மண்டபம்\, எண்:100/158\, ஹபிபுல்லா சாலை\, வடக்கு உஸ்மான் சாலை\, தியாகராயநகர்\, சென்னை – 600017.\n\n\nநன்றி
URL:https://fetna.org/event/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa/
CATEGORIES:FeTNA Event
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260110
DTEND;VALUE=DATE:20260111
DTSTAMP:20260403T191441
CREATED:20260110T201620Z
LAST-MODIFIED:20260209T210409Z
UID:5737-1768003200-1768089599@fetna.org
SUMMARY:தமிழ்ப் பாடல் பயிற்சிப் பட்டறை -திருபுவனம் குரு.ஆத்மநாதன்
DESCRIPTION:வணக்கம்! \n\nஇனிய வணக்கம்.\nதமிழ்ப் பாடல் பயிற்சிப் பட்டறை\n\n\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பாக “தமிழ்ப் பாடல் பயிற்சிப் பட்டறை” வரும் சனவரி 10\, 2026 சனிக்கிழமை\, காலை 10 மணிக்கு (அமெரிக்க கிழக்கு சீர்தர நேரம்) இணையம் வழியாக நடைபெற உள்ளது.\nகடந்த ஆண்டு நடத்திய மக்களிசை பயிற்சிப் பட்டறை மிகுந்த வரவேற்பை பெற்றது.\nஇந்த முறை திருபுவனம் குரு.ஆத்மநாதன் அவர்கள் நம்மோடு இணைந்து தமிழ்ப் பாடல் பயிற்சிப் பட்டறையை நடத்த உள்ளார்.\n\n\n இசை ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\n\n\nபதிவு/படிவ இணைப்பு : https://forms.gle/BQpot1k4eRuLJEfs6\n\n\nபதிவிற்கான இறுதி நாள் : சனவரி 09\, 2026\n\n\n நாள்: சனிக்கிழமை\, சனவரி 10\, 2026\n அமெரிக்க கிழக்கு நேரம்: காலை 10 மணி\nஇந்திய/இலங்கை நாள் & நேரம்: மாலை 8:30 மணி\n\n\nஇணைய உரலிகள்:\nZoom: பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்\n\n\nYT Live: http://fetna.org/ytlive\nFB Live: http://fetna.org/fblive\n\nநன்றி.
URL:https://fetna.org/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/
LOCATION:USA\, United States
CATEGORIES:FeTNA Event
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260117
DTEND;VALUE=DATE:20260118
DTSTAMP:20260403T191441
CREATED:20251024T151132Z
LAST-MODIFIED:20251024T151132Z
UID:5350-1768608000-1768694399@fetna.org
SUMMARY:கோவை மாநகரில் தொழில் முனைவோர் மாநாடு – 2026
DESCRIPTION:வணக்கம்! \nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு (FiTEN) மதுரையைத் தொடர்ந்து “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” எனும் சிறப்பைக் கொண்ட கோவை மாநகரில் எதிர்வரும் (2026) சனவரி 17-ஆம் நாள் நடைபெற உள்ளது. உலகெங்கும் உள்ள தொழில் முனைவோர்\,முதலீட்டாளர்கள்\, புத்தாக்க ஆர்வலர்கள்\, கனவுகளைச் சுமந்து வரும் ஆற்றல்மிகு இளம்தலைமுறைகள் என அனைவருக்குமான திறன்மிகு தளமாக அமைய உள்ளது. இதில் கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். \n \n\n\n\n \nமாநாட்டிற்கான கூடுதல் தகவல்களுக்கு இணைந்திருங்கள் @ https://fiten.org/ \nநாள் : சனவரி 17\, 2026 (சனிக்கிழமை)\nநேரம் : காலை 8:00 மணி முதல் (இந்திய நேரம்)\nஇடம் : Le Meridian\, Coimbatore\, Tamil Nadu\, India \nFiTEN 2026 – Coimbatore \nWe\, FeTNA thrilled to announce our next FiTEN (FeTNA International Tamil Entrepreneur Network) conference\, taking place in the vibrant industrial city of Coimbatore\, also known as the ‘Manchester of South India\,’ on January 17th\, 2026! \n𝐅𝐢𝐓𝐄𝐍 is all about fostering connections\, bringing together entrepreneurs\, investors\, innovators\, and young dreamers from all over the world and providing an effective platform for their business growth. We cordially welcome you to join us in making this a powerful and successful event. \nDate : Saturday\, January 17\, 2026\nTime : 8:00 am IST onwards Venue : Le Meridian\, Coimbatore\, Tamil Nadu\, India \nMap:\nhttps://maps.app.goo.gl/eKiNaeomXdzk8Uv38?g_st=ipc \nFor more information\, stay tuned with us @ https://fiten.org/
URL:https://fetna.org/event/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/
LOCATION:தமிழ்நாடு\, India
CATEGORIES:FeTNA Event
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260124
DTEND;VALUE=DATE:20260125
DTSTAMP:20260403T191441
CREATED:20260209T195912Z
LAST-MODIFIED:20260209T195042Z
UID:5734-1769212800-1769299199@fetna.org
SUMMARY:புனைவெழுத்தின் சாத்தியங்கள்- எழுத்தாளர் பா.வெங்கடேசன்
DESCRIPTION:வணக்கம்! \nபுனைவெழுத்தின் சாத்தியங்கள் \nமொழி என்ற தொடர்பு சாதனம் உருவானபோதே புனைவு வாய்மொழியாக கதை சொல்வது என்ற செயலும் உருவாகி பின்னர் அவை எழுத்திலக்கியங்களாக வலுப்பெற்றிருக்க வேண்டும். மனிதக் கற்பனையை\, மொழியைத் தாண்டி புனைவின் வழியே நீட்டிக்கத்தான் கவிதைகள்\, கதைகள் எல்லாம் செய்யப்படுகின்றன. புனைவின் வழியே ஒரு சமூகம் இன்னும் கண்டடையாததை இன்னொரு சமூகம் வழியாகக் கண்டடைவதை காலங்காலமாய் கதைகள்\, புனைவுகள் செய்து வருகின்றன. புராணங்கள்\, வாய்வழிக் கதைகளின் தேவையும் இதுதான்\, மொழியைத் தாண்டி புனைதல். மனித சமூகம் பல்வேறு நிலைகளைக் கடந்து படிப்படியாகப் பல வளர்ச்சிகளைப் பெற்று இன்றும் பெரும் நம்பிக்கையுடன் பூமியில் காலூன்றி நிற்பதற்கு கற்பனையும்\, கதை சொல்லும் முறையும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. மனித வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பது கற்பனைகளும்\, கதைகளும் தான். \nஎழுத்து மரபில் பேசப்பட்ட கதைகளைவிட வாய்மொழி மரபில் பரவிய கதைகளே இன்றும் பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதாக இருக்கிறது. ஒவ்வொரு தேசத்திலும்\, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான கதைகள் உருவாகியிருக்கின்றன. பல கதைகள் தேச எல்லைகள் கடந்து உலகப் பொதுக் கதைகளாகவும் பேசப்படுகின்றன. தமிழ் மரபு\, காவியங்களை\, வாய்மொழிக்கதைகளை அடிப்படையாகக்கொண்டது. அயல் இலக்கியங்கள் புனைவுகளில் வெவ்வேறு பரிசோதனைகளை செய்யக் கூடியன. கதையின் போக்கு\, கரு\, உத்தி\, மொழி\, கதைசொல்லல் என ஒவ்வொன்றிலும் புது முயற்சிகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். கடந்த நூற்றாண்டில் தமிழிலும் புனைவில் மொழி\, வடிவம்\, கதை சொல்லல் ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. புனைவெழுத்தின் சாத்தியங்கள் என்ன என்பதை அதன் வீச்சின் நீள்வெளியில் எந்தப் புதிய தடங்களை நாம் கண்டடைகிறோம் என்பதும் ஒவ்வொரு படைப்பாளியின் கற்பனை மற்றும் புனைவின் எழுச்சியில் தீர்மானமாகிறது. \nஅந்த வகையில் புனைவெழுத்தில் அதன் வடிவத்தில்\, மொழியில் பல உத்திகளைகளைக் கையாண்டவர் எழுத்தாளர் பா.வெங்கடேசன். சமகால அரசியலையும்\, வரலாற்றையும் இணைத்து ஊடுபிரதித்தன்மையுடன் அவர் எழுதிய நாவல்கள் புகழ்பெற்றவை. பா.வெங்கடேசனின் ராஜன் மகள் என்னும் நீள்கதை அவருக்கு தமிழ் புனைவிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை அளித்தது. கதைப்பின்னலாகவும்\, மொழிப்பின்னலாகவும் எழுதப்பட்ட அவரது தாண்டவராயன் கதை மற்றும் பாகீரதியின் மதியம் என்ற இரு நாவல்களும் சிறந்த நாவல்களின் வரிசையில் வருவன என விமர்சகர்கள் கருதுகிறார்கள். வாரணாசி அவருடைய மூன்றாவது நாவல். வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991-இல் எழுதிய (Ghost in the Machine ) கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்கும் குறுநாவலை பொய்யுரு என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். புனைவிலக்கியத்தில் இவருடைய சீரிய பங்களிப்பிற்காக ‘ஸ்பாரோ’\, ‘தமிழ்திரு’\, ‘விளக்கு’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. \nஇந்தமாதம் நடைபெற இருக்கும் இலக்கியக்கூட்டத்தில் எழுத்தாளர் பா.வெங்கடேசன்\, புனைவெழுத்தின் சாத்தியங்களை வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்க வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். \nபுனைவெழுத்தின் சாத்தியங்கள் பற்றி அறிந்து கொள்ள இம்மாத இலக்கியக்கூட்டத்தில் இணைந்திருங்கள். \nநாள்: சனவரி 24\, சனிக்கிழமை\nஅமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி\nஇந்திய நேரம்: இரவு 9.30 மணி \nZoom: https://fetna.org/ilakkiyam-online\nYT Live: http://fetna.org/ytlive\nFB Live: http://fetna.org/fblive \nநன்றி.
URL:https://fetna.org/event/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99/
LOCATION:USA\, United States
CATEGORIES:FeTNA Event
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260214
DTEND;VALUE=DATE:20260215
DTSTAMP:20260403T191441
CREATED:20260209T201359Z
LAST-MODIFIED:20260209T203654Z
UID:5739-1771027200-1771113599@fetna.org
SUMMARY:சிறுகோட்டுப் பெரும்பழம்:சங்க இலக்கியத்தில் காதல் - கவிஞர் சக்தி ஜோதி
DESCRIPTION:உயிர் சிறிது; காதலோ பெரிது!! (குறுந்தொகை:18) \nவேரல் வேலி வேர்க்கோட் பலவின்\nசாரல் நாட! செவ்வியை ஆகுமதி!\nயார்அஃது அறிந்திசி னோரே\, சாரல்\nசிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவள்\nஉயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!\n-கபிலர். \nகாதல் என்பது வெறும் உணர்வோ செயலோ அல்ல\, அது ஒரு நாகரிகத்தின் அடையாளம். எந்த சமூகம் காதலை கொண்டாடுகிறதோ\, அந்த சமூகமே உயர்ந்த நாகரிகம் கொண்டதாக இருக்கும். மனித குலத்தின் ஆதி நிலங்களுள் ஒன்றென சொல்லப்படும் தமிழ் நிலமானது\, உயிர்களின் அடிப்படை உணர்வான அன்பின் மீது கட்டமைக்கப்பட்ட சமூகமாகவே தோன்றி நிலைப்பெற்றுள்ளது. சங்ககால தமிழ் சமூகம் பொருள்முதல்வாத சமூகமாக இருந்தது. அதனால்தான் அவர்களால் காதலை உயர்வாக போற்ற முடிந்தது. களவும்\, கற்பும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளாக இருந்தன. தமிழர்கள் காதலை வெறும் உணர்வாக மட்டும் பார்க்கவில்லை. அதை மிக நுட்பமாக வகைப்படுத்தி\, ஐந்திணைகளாக பிரித்தனர். சங்க இலக்கியங்களின் அகப்பாடல்கள் அன்பின் முதிர்ச்சிகளாகிய காதற் பாடல்களாகும். உலகக் காதலர் அனைவருக்கும் உரியவையாகும். இதுவரை கண்டெடுக்கப்பட்ட 2381 சங்கப் பாடல்களில்\, 1862 பாடல்கள் அகத்திணைப் பாடல்களாக உள்ளன. இது மொத்த பாடல்களில் 78% என்ற அளவிற்கு காதல் பாடல்கள் இருப்பதைக் காட்டுகிறது. இந்த புள்ளிவிவரமே சங்ககால தமிழர்கள் காதலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சங்ககால தமிழ்ச் சமூகம் காதலை ஒரு பண்பாட்டு அடையாளமாகக் கொண்டாடியது. குறுந்தொகையில் வரும் இந்த பாடல் அதை உணர்த்துகிறது: \n“யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” \nகாதலைக் கொண்டாடும் இம்மாதத்தில் “சிறுகோட்டுப் பெரும்பழம் – சங்க இலக்கியத்தில் காதல்” என்ற தலைப்பில் கவிஞர் சக்தி ஜோதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். \nசங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கவிஞர் சக்தி ஜோதி 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி\, 2025 ஆம் ஆண்டில் “திருக்காட்சி” என்ற கவிதை நூல் வரை இதுவரை பதினைந்து கவிதைத் தொகுப்புகளையும்\, 2026 ஆம் ஆண்டில் “சங்க இலக்கியம்-உடல் மனம் மொழி என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். சங்கப் பாடல்கள்\, நவீன இலக்கியம்\, நீர் மேலாண்மை\, கல்வி\, சுற்றுச்சூழல்\, விவசாயம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார். பெண்ணையும் இயற்கையையும் இணைத்து கவிதைகள் படைப்பது இவரது பலமாகும். சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம்\, சமூக ஊடகம் வரையிலான பார்வையுடன் இவரது கட்டுரைகள் அமைந்துள்ளன. தமிழ் இலக்கியத்தில் இவரது பங்களிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். \nசங்க இலக்கிய காதல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இம்மாத இலக்கியக்கூட்டத்தில் இணைந்திருங்கள். \nநாள்: பிப்ரவரி 14\, சனிக்கிழமை\nஅமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி\nஇந்திய நேரம்: இரவு 9.30 மணி\nZoom: https://fetna.org/ilakkiyam-online\nYT Live: http://fetna.org/ytlive\nFB Live: http://fetna.org/fblive \nநன்றி.
URL:https://fetna.org/event/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:FeTNA Event
ORGANIZER;CN="FeTNA":MAILTO:contact@fetna.org
END:VEVENT
END:VCALENDAR