வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க பொங்கல் விழா

Loading Events
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக 2017 ஆம் ஆண்டு தைப் பொங்கல் விழா வரும் சனவரி 28 சனிக்கிழமை வெர்சீனியாவில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழர்களின் மரபுக் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் பல நடைபெற உள்ளன. தமிழகத்தில் இருந்து நகைச்சுவைக் கலைஞர்கள் மதுரை முத்து மற்றும் அமுதவாணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் சார்பாக வாசிங்டன்வட்டாரத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வாசிங்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இப்பொங்கல் விழா நிகழ்ச்சியைச் சிறப்பிக்க பேரவையின் சார்பாக அழைக்கின்றோம்.