General

ஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்

அன்புடையீர், வணக்கம். ‘ஏறு தழுவுதல்’ என்றும் ‘சல்லிக்கட்டு’ என்றும் அழைக்கப்படுகிற இவ் விளையாட்டு , தமிழர்களின் வீரவிளையாடு! பண்டைய இலக்கியங்களில், தமிழர்களின் வீர விளையாட்டாக ‘ஏறுதழுவுதல்’ என்றுதான் இருக்கிறது. கலித்தொகை, திருவிளையாடல் புராணம், நாலடியார் போன்ற இலக்கியங்கள் அனைத்திலும் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரில்தான் இவ் வீர விளையாட்டு தொடர்பான செய்திகள் காணக் கிடைப்பதாலேயே, இது எத்தகைய தொன்மை வாய்ந்த்து என்பதை நம்மால் உணர முடிகிறது. ஜல்லிக்கட்டு வழக்கிற்கானத் தீர்ப்பை, எதிர் வரும் நம் தமிழர் திருநாளாம், [...]

உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா

உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாக் கொண்டாட்டம் வர்ஜினியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். நாள்: 7, 8, 9 அக்டோபர் 2016 - வெள்ளி மாலை,சனி முழுநாள், ஞயிறு காலை இடம்: MERCER MIDDLE SCHOOL AUDITORIUM, 42149 GREENSTONE DRIVE, ALDIE, VIRGINIA 20105, USA [Near [...]

தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் – பேரவையின் வாழ்த்துக்கள்

தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் - பேரவையின் வாழ்த்துக்கள் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பேரவை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இவர் 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். இவர் சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியை அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தியா சார்பில் பாராலிம்பிக் போட்டியில் உயரம் [...]

இசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து

இசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு பெருமைக்குரிய ராமன் மகசசே பரிசு கிடைத்திருப்பது அறிந்து பேருவகை அடைந்து அவரை வாழ்த்துகிறது. இவ்வாண்டு ஜூலை முதல் வாரத்தில் பேரவைத் தமிழ்விழாவில் கலந்து தமிழிசைப் பட்டறை நடத்தி, தமிழிசை வரலாறு சொற்பொழிவாற்றியதை அன்புடன் நினைவு கூர்கிறோம். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய நகரங்களில் 2011-ம் ஆண்டு மறுமலர்ச்சிக்காக இசை விழாக்களை நடத்தியது வரலாற்று நிகழ்ச்சி. பேரவை (FeTNA) [...]

அருவி இதழ் – ஆசிரியர் கடிதம்

ஆசிரியர் கடிதம் நமது தமிழ்ச்சங்கப் பேரவையின் இதழான அருவியின் கோடை இதழ் வழியாக உங்களனைவரையும் சந்திப்பதில் ‘மகிழ்ச்சி'. இந்த இதழ் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நமது தமிழ்ச்சங்கங்களின் முக்கிய நிகழ்ச்சிகள், பேரவைச் செய்திகள், இலக்கியக் கூட்டங்கள் போன்றவை குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறது. நமது பேரவைத் தலைவர் தனது செய்தியில் கூறியுள்ளது போல, அமெரிக்க மண்ணில், தமிழ் மரபையும், தமிழ் மொழியையும் பேணி வளர்த்திட, நமது சங்கங்களில் நடத்தப்படும் பலவிதமான நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்களை ஒரே இடத்தில் படிக்கும் [...]

பேரவைத் தலைவர் கடிதம்

பேரவைத் தலைவர் கடிதம் அன்புள்ள தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். வட அமெரிக்காவில் இயங்கும் 45-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 29-வது தமிழ் விழா மிகச் சிறப்பாக நியூஜெர்சி, ட்ரெண்டன் நகரில் நடந்து முடிந்தது. விழாவின் வெற்றிக்கு உழைத்த அனைத்து தன்னார்வத் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 2014-2016- ஆண்டிற்கான செயற்குழுவின் பொறுப்புக்காலம் நிறைவடைந்து, புதிய செயற்குழு பொறுப்பேற்கிறது. பேரவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து தம் பணிகளை செவ்வனே செய்து முடித்த 2014-16 ஆம் [...]