கோடை விழா 2016 – நியூ இங்கிலாந்து

நெட்ஸ் (நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம்), தனது வருடாந்திர கோடை விழாவை ஹோப்கின்ட்டன் பூங்காவில் ஆகஸ்ட் 27, சனிக்கிழமை கொண்டாடியது. காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான லெமன் ஸ்பூன், ஓட்டப் பந்தயம், தண்ணீர் வாளி என்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

100க்கும் மேல் மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். முதன் முறையாக தளத்தில் நேரடியாக வாழைக்காய் பஜ்ஜி, நீர் மோரு, காபி என்று நெட்ஸ் குழு ஏற்படுத்திய தேநீர் பந்தல் மக்களிடம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. புது உறுப்பினர்களின் அறிமுகமும், ஈடுபாடும் சிறப்பாக அமைந்தது. குழந்தைகள் விட்டுப் பிரிய மனமில்லாமல், மீண்டும் அடுத்த வருடம் பார்ப்போம், விளையாடு வோம் என்று விடை பிரிந்தோம்.