முத்தமிழ் விழா 2016 – வாசிங்டன்

முத்தமிழ் விழா 2016, ஜூலை 09, மேரிலாந்தில் ஊட்டன் உயர்நிலைப் பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 29-ஆம் ஆண்டு தமிழ் விழாவில் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய தமிழ் மரபுக் கலைகள் மீண்டும் அரங்கேறி, அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், அறுசுவை மிக்க உணவு முதலியன விழாவிற்கு வந்திருந்தோரை மகிழ்ச்சிப்படுத்தின.

பேரவை விழாவுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் சித்தமருத்துவர் செல்வகணபதி முதலியோர் வந்து விழாவில் சிறப்புரை ஆற்றினர். ஹார்வார்டு பல்கலைகழகத் “தமிழ் இருக்கை” (Tamil Chair) நிதிக்காக வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக $2000 வெள்ளி வழங்கும் செய்தி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் நடந்த சித்திரை விழாவின்போது தமிழகத்தில் உள்ள தாய் தமிழ்ப் பள்ளிக்கு $1000 வெள்ளி நன்கொடை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

தமிழ் மரபினை பறை சாற்றும் வகையில் அமைந்திருந்த சித்திரை விழா மற்றும் அனைத்து விழா ஒளிப்பங்களையும் காண: www.washintontamilsangam.org