

சிகாகோ தமிழ்ச்சங்கமும், நேபர்வில் இந்திய அமைப்பும் இணைந்து நடத்திய இந்திய நாள் ஊர்வலம் (India Day Parade), ஆகஸ்ட் 14ஆம் நாளன்று மிகச் சிறப்பாக நடந்தது. செயின்ட் லூயிஸிலிருந்து அமெரிக்கன் பறை குழுவும், சிகாகோ குழுவினரும் சேர்ந்து நிகழ்வினை இனிமையாக ஆக்கினர். பல குழந்தைகள், சுதந்திர போராட்டத் தலைவர்களைப் போல் வேடமிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
நாம் வாழும் சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில், சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் இளையோர் குழு, டுபேஜ், கவுன்டியில், 2 மைல் சாலையைத் தூய்மைப்படுத்தும் பணியினை (Adopt A Highway Project): ஆகஸ்ட் 13 அன்று மேற்கொண்டார்கள். மேலும் பாலாஜி திருக்கோயிலுடன் இணைந்து ஆகஸ்ட் 6-ஆம் நாள் இலவச உடல் பரிசோதனைச் சேவை நடத்தப்பட்டது.
© 2022 FeTNA. All rights reserved. Powered by CDS.