பேரவையின் புதிய சட்ட திட்ட மாற்றங்கள் ஏற்பு

பேரவையின் புதிய சட்ட திட்ட மாற்றங்கள் ஏற்பு

பேரவையின் சட்ட திட்ட சீராய்வுக்குழு பரிந்து ரைத்திருந்த மாற்றங்கள் பல கலந்துரையாடல் கூட்டங்களிலும், ஜூலை 3-ம் நாள் நடந்த பொதுக்குழுக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, பேராளர்களின் முறைப்படியான ஒப்புதலுக்காக வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டது. வாக்களிப்ப தற்கான கால அவகாசம் ஆகஸ்டு மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், சீராய்வுக்குழு வின் பரிந்துரைகள் யாவும் பேராளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற செய்தியை மகிழ்வு டன் தெரிவித்துக்கொள்கிறோம். இதுகுறித்த மேல்விபரங்கள் பேராளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். புதிய சட்ட திட்டங்கள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், புதிய பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான பணிகளை பேரவை யின் செயற்குழு தொடங்கி விட்டிருக்கிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சீராய்வுப் பணியைச் செவ்வனே செய்திட்ட சீராய்வுக்குழுவுக்கு மீண்டும் செயற் குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.