இசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து

இசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு பெருமைக்குரிய ராமன் மகசசே பரிசு கிடைத்திருப்பது அறிந்து பேருவகை அடைந்து அவரை வாழ்த்துகிறது. இவ்வாண்டு ஜூலை முதல் வாரத்தில் பேரவைத் தமிழ்விழாவில் கலந்து தமிழிசைப் பட்டறை நடத்தி, தமிழிசை வரலாறு சொற்பொழிவாற்றியதை அன்புடன் நினைவு கூர்கிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய நகரங்களில் 2011-ம் ஆண்டு மறுமலர்ச்சிக்காக இசை விழாக்களை நடத்தியது வரலாற்று நிகழ்ச்சி. பேரவை (FeTNA) தமிழ்விழாவில் அவருக்கு ‘இன்தமிழ் இசைச்செல்வர்’ என்ற பட்டத்தை வழங்கியது. கர்நாடக இசைப்பாடல்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் செயல்பட்டு வரும் அவரின் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்