தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் – பேரவையின் வாழ்த்துக்கள்

தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் – பேரவையின் வாழ்த்துக்கள்

ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பேரவை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இவர் 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். இவர் சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியை அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தியா சார்பில் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. வாழ்க்கையில் பல தடைகளைத் தாண்டி அவர் அடைந்துள்ள இந்த உயரம் எண்ணற்ற குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.