சித்திரைத் திரு(தெரு)விழா – டாலஸ்

டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கமும், FULL HOUSE ENTERTAINMENT-ம் இணைந்து நடத்திய சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் புது முயற்சியாகக் கடைவீதி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவகங்கள் எனத் திரு(தெரு) விழாவை நினைவு படுத்தும் வகையில் தெரு விழாவாகக் கொண்டாடினார்கள். பின்னர் கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் சிறப்புரை வழங்கும் போது ஒவ்வொருவர் வீட்டிலும் சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை இருப்பதைப் போல் நூலக அறையையும் கட்டாயம் உருவாக்குங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

ஹார்வார்டு பல்கலக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டும் முயற்சி குறித்த அறிவிப்பை மருத்துவர் சுந்தரேசன் சம்மந்தம், திரு.பால்பாண்டியன் மற்றும் தலைவர். திரு.கால்டுவெல் வேள்நம்பி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து தொலைக்காட்சிப் புகழ் மனோ, சித்ரா, விஜய்பிரகாஷ், நிகில்மேத்யூ, பார்வதி மேனன் ஆகியோர் இணைந்து வழங்கிய மாபெரும் இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.