சித்திரை கலாட்டா – மெம்பிஸ்

மெம்பிஸ் நகர் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வண்ணம் தென் மத்திய தமிழ்ச்சங்கம் சார்பாக வருடந்தோறும் “சித்திரை கலாட்டா” என்னும் கலை நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் மே மாதம் 7 ஆம் தேதி ஹூஸ்டன் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. தமிழ்ப் பள்ளி மாணவர்களின் பாடல் தொகுப்பும் பற்பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் கரகோசத்தைப் பெற்றது. சென்னை வெள்ள நிவாரண நிதி எவ்வாறு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது பற்றி அறங்காவலர் விக்னேஷ், மேடையில் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

விழாவை இனிமையுடன் தொகுத்த சோமசேகர் மற்றும் மாலதி இராமகிருஷ்ணன் அனைவரின் பாராட்டையும் பெற்றனர். ஆதி நன்றியுரை நவில விழா இனிதே நிறை வடைந்தது.

அனைவருக்கும் இரவு உணவுப்பொட்ட லங்கள் வழங்கப்பட்டது. தென்மத்தியத்தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், அறங்காவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் பேருதவியுடன் விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.