பேருந்து மகிழ் உலா – நியூயார்க்

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் 2016 -ம் ஆண்டிற்கான பேருந்து மகிழ் உலா மிகச் சிறப்பாக இருந்தது. ஏராளமான தமிழ்க் குடும்பங்கள் கலந்துகொண்டு மகிழ் வடைந்தனர். விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஆகாய மற்றும் வான்வெளி அரங்கத்தில் பல்வேறு விமானங் களையும், அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் இல்லம், பிரமிக்க வைக்கும் லுராய் குகை அமைப்புகள், போடோமோக் நதியில் படகு சவாரி மற்றும் குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன் நினைவிடம் போன்ற வியத்தகு இடங்களை பார்த்தும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து திரும்பினர்.