பேரவைத் தலைவர் கடிதம்

பேரவைத் தலைவர் கடிதம்

அன்புள்ள தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

வட அமெரிக்காவில் இயங்கும் 45-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 29-வது தமிழ் விழா மிகச் சிறப்பாக நியூஜெர்சி, ட்ரெண்டன் நகரில் நடந்து முடிந்தது. விழாவின் வெற்றிக்கு உழைத்த அனைத்து தன்னார்வத் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

2014-2016- ஆண்டிற்கான செயற்குழுவின் பொறுப்புக்காலம் நிறைவடைந்து, புதிய செயற்குழு பொறுப்பேற்கிறது. பேரவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து தம் பணிகளை செவ்வனே செய்து முடித்த 2014-16 ஆம் ஆண்டு செயற்குழு உறுப்பினர்களுக்கு நமது வாழ்த்தையும், பாராட்டையும் கூறி நன்றி கூறுவோம்.

2017 பேரவை விழா மினசோட்டா மாநகரில், மினசோட்டா தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து நடக்க இருக்கிறது.

இவ்விழாவிற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

உலக சித்தா அறக்கட்டளையும் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரியும் இணைந்து வழங்கிய 2016 சித்தர் மரபுத் திருவிழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மருத்துவமும் வாழ்வியலும் என்ற மையக்கருத்தோடு நடந்தேறிய இந்தத் தமிழ் மரபுத் திருவிழாவுக்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, ஓர் உதவும் ஆதரவு அமைப்பாக இருப்பதில் பெருமைப்படுகிறது.

அமெரிக்க மண்ணில், தமிழ் மரபையும், தமிழ் மொழியையம் பாதுகாக்க, தமிழ் விழாக்கள், இலக்கியக் கூட்டங்கள் என பல்வேறு தமிழ்க்காப்புப் பணிகளைச் செய்து வரும் தமிழ்ச்சங்கப் பேரவை, பல தன்னார்வலர்களின் உழைப்பாலும் ஊக்கத்தாலும் ஓங்கி நிற்கிறது.

வாழ்க தமிழ், வளர்க தமிழினம்!!

நன்றி
செந்தாமரை பிரபாகர்
தலைவர், பேரவை.