அருவி இதழ் – ஆசிரியர் கடிதம்

ஆசிரியர் கடிதம்

நமது தமிழ்ச்சங்கப் பேரவையின் இதழான அருவியின் கோடை இதழ் வழியாக உங்களனைவரையும் சந்திப்பதில் ‘மகிழ்ச்சி’. இந்த இதழ் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நமது தமிழ்ச்சங்கங்களின் முக்கிய நிகழ்ச்சிகள், பேரவைச் செய்திகள், இலக்கியக் கூட்டங்கள் போன்றவை குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறது. நமது பேரவைத் தலைவர் தனது செய்தியில் கூறியுள்ளது போல, அமெரிக்க மண்ணில், தமிழ் மரபையும், தமிழ் மொழியையும் பேணி வளர்த்திட, நமது சங்கங்களில் நடத்தப்படும் பலவிதமான நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்களை ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பு, பல மூலிகைகளைத் தன்னகத்தே சேர்த்து தேனருவியாகக் கொட்டும் குற்றாலத்தில் ஆனந்தமாக நனையும் அனுபவமே ஆகும். தங்கள் நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துகொண்ட சங்கங்கள் மற்றும் அயராது உழைத்துத் தொகுத்த அருவி ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அருவியின் முந்தைய வெளியீடுகளை பேரவையின் இணையத்தில் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். உங்களின் ஆக்கக் கருத்துக்களை எங்களுக்குத் தெரிவியுங்கள். அடுத்த இதழில் மீண்டும் சந்திப்போம்!

அன்புடன்
இளங்கோவன் தங்கவேலு