அமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…

அமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய அமைப்பு தலைச்சிறந்த தமிழறிஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் புதுமைப்பித்தன் நினைவு விருது வழங்கி பெருமை படுத்தி வருகிறது. 2018க்கான விருதுகளுக்கு எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் , பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருது வழங்கும் விழா சனவரி மாதம் 4ம் தேதி மதுரையில் உள்ள மெட்ரோபோல் ஹோட்டலில் நடைபெற உள்ளது. விருது பெற்றுள்ள தமிழறிஞர்களுக்கு பேரவை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. இந்த முயற்சிக்கு உதவி செய்வதற்காக பேரவை பெருமை கொள்கிறது. இந்த அரிய முயற்சிக்காக விளக்கு அமைப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.