முனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி

முனைவர் அழகப்பா இராம்மோகன் ஐயா அவர்களின் மறைவிற்கு. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழர் பண்பாட்டு கையேடு நூலினை உலகிற்கு தந்த பெருந்தகை. www.kural.org என்ற இணையதளத்தின் வழியே தமிழர்களுக்குத் தொண்டாற்றிய தமிழ்த்தொண்டர். 2003ஆம் ஆண்டு பேரவை விழாவில் முனைவர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சினை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்ததில் முக்கியப் பங்காற்றியவர். அறிவியல் கல்வியை தமிழ் நாட்டு மாணவச் சமுதாயத்தின் நலனுக்காக தமிழில் மொழி பெயர்த்து பள்ளிகளுக்கு வழங்கி ஊக்குவித்த உத்தமர். இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.  அவர் வெளியிட்ட தமிழ் பண்பாட்டு கையேடு அடுத்த தலைமுறைக்கும், நமக்கும் தமிழரின் பண்பாடு, அறிவியல், தொன்மை, கலை மற்றும் அனைத்து பங்களிப்பையும் தெளிவாக ஆங்கிலத்திலும், தமிழிலும் விளக்கியுள்ளது. Annenberg Foundation பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித தத்துவத்தை எளிமையாக புரிந்து கொள்ள மாபெரும் அறிவியற் அறிஞர்கள் மூலம் ஒரு காணொளி திட்டத்தை தயாரித்தது. அந்த உலகப்புகழ் பெற்ற காணொளிகளை தமிழில் மொழி மாற்றம் செய்ய உரிமை வாங்கி , அவற்றை தமிழில் மொழி மாற்றி , தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொடுத்தவர். .பேரவையின் நீண்டநாள் ஆதரவாளர்.

Funeral arrangements
Sunday Dec. 15th 2019 (9 a.m. to 12:00 noon) Visitation followed by Lunch
Boilingbrook – McCauley Funeral Chapel & Crematorium
630 759 1212
530 W. Boughton Road
Bolingbrook, IL: 60440