

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் திருநாள்/ பொங்கல் விழா கொண்டாட்டம்
தமிழோடு! தீஞ்சுவைத் தமிழைத்
தேனெனச் சொரிந்து
தெள்ளமுதைத் திகட்டாமல்
தருமெங்கள் ஈழ, தமிழக உறவுகளே!
தகிக்கும் சொல் வேள்வியில்
தங்கமென ஒளிசிந்தப் போகும்
தனிப் பெரும் தாய் மொழியே
தமிழே உயிரே !
இலக்கியம், சமூகம், உறவு என
மூன்று குதிரை தேரேறி
உனைக்காண வருகின்றோம்
உன்னை இங்கே கொண்டாடி
உறவுப் பாலத்தை
உறுதிப்படுத்த வருகின்றோம்!
அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் இலங்கை விவாதிகள் கழகம் இணைந்து வழங்கும் “அனல் வினா மன்றம்”! சூடு பறக்கப் போகும் தமிழ் விவாதத்தோடு, ஈழ- தமிழக உறவின் தொன்மையையும் விளக்கவிருக்கும் தனிப்பெரும் நிகழ்வு.
அறிவியல் முறைமைகளால், சாதி/மதம் கடந்த தமிழ்ச் சிந்தனைகளால், புதிய “உலகத்” தமிழ்வெளியில் பயணிப்பதே நம் நோக்கம். மற்றும் ஈழத்துக்கு மேலும் மேலும் பாலங்கள் அமைப்பதே! (குறிப்பாக மாணவர்கள்/பெண்கள்) உறவுப் பாலம், கருத்துப் பாலம், கல்விப் பாலம், முன்னேற்றப் பாலம்..இப்படிப் பல பாலங்களால், சமூகநீதி மிக்க “தமிழ்” என்கிற ஒரே நற்குடையின் கீழ் இணையும் இன்பம்! அவரவர் தனித் தீவுகளிலேயே தேங்கி விடாது, தமிழ்த் தேரை, உலகப் பெரு வீதிகளிலும் ஓட்டுவோம், வாருங்கள்!
ஜனவரி 2021 ஆம் ஆண்டு 16 ஆம் நாள் சனிக்கிழமை நடக்கவிருக்கும் நிகழ்வில் நாம் அனைவரும் இணைவோம்.நன்றி!
பார்வையாளர்களுக்கு வினாடி வினாவும் பரிசும் உண்டு
Link: youtube.com/fetna
Date: 1/16/2021
Time: 11:00 AM Eastern Time 9:30 PM India/Srilanka
https://www.youtube.com/playlist?list=PLQkQAGwIwW5SVO0XzO4LlP9jQMIOuXOzc
© 2022 FeTNA. All rights reserved. Powered by CDS.