தொல்காப்பியர் நாள் அறிமுக விழா

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும்

தொல்காப்பியர் நாள் அறிமுக விழா

ஹூஸ்டன் மற்றும் டொரண்டோ தமிழ் இருக்கை நிதி திரட்டல் விழா

பேரவை ஏப்ரல் 14 ஆம் நாளை தொல்காப்பியர் நாளாக அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாட இருக்கிறது.

மேலும் தமிழுக்காகவும், நாளைய தலைமுறைக்காகவும், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சிக்காகவும் ஹூஸ்டன் மற்றும் டொரண்டோ பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க பேரவையின் சார்பாக நிதி திரட்டப்படுகிறது.

நாள்: 10 ஏப்ரல் 2021, சனிக்கிழமை

நேரம்: மாலை 6 மணி (கிழக்கு)

இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழ் ஓசை சேர்ந்திசைக் குழு வழங்கும் சங்க இலக்கியம் சார்ந்த இசை நிகழ்ச்சி YouTube நேரலையில் நடைபெறும்!

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

இரு கை கொடுப்போம்!

தமிழ் இருக்கை அமைப்போம்!

நன்றி,

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை