திரு.தமிழன் பாக்கியராஜ் ஐயா மறைவுக்கு இரங்கல்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரும், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவருமான திரு.தமிழன் பாக்கியராஜ் ஐயா அவர்கள் இன்று காலை பசிபிக் நேரம் 8:30 மணியளவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்டான்போர்டு பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் லாக்கிட் மார்டீன் விண்வெளி (Lockheed Martin Space)அமைப்பில் பணியாறியவர். Moonspell என்ற அறிவியல் கதை புத்தகம்((https://www.amazon.com/Moonspell-M-N…/dp/B007TEC47W)) மற்றும் Spoken Tamil for English Speakers (By Dr. M. N. Tamilan and Skylar Hansen-Raj) ஆகிய நூல்களை எழுதி உள்ளார் . பல ஆண்டுகள் கலிபோர்னியா தமிழ் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி ஆற்றி உள்ளார். அவர் பல்வேறு தமிழ் சார்ந்த முன்னெடுப்புகளை எடுத்த சிறந்த தமிழ் ஆர்வலர். பண்பான , அன்பான சிறந்த மனிதர். பேரவையின் மீது ஆழ்ந்த பற்றும் ஆதரவும் கொண்டவர்.. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.