தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு இரங்கல்!

நடமாடும் தமிழ் பல்கலைக்கழகம் தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன்* அய்யா அவர்கள் இன்று (06.04.2019 ) காலை 7.00 மணிக்கு இயற்கை எய்தினார்.நம் தமிழ் இனத்திற்கு ஓர் மாபெரும் இழப்பு..அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வட அமெரிக்கத்தமிழர்கள் சார்பிலும், வட அமெரிக்கத்தமிழ் மன்றங்கள் சார்பிலும்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
 
சிலம்பொலியார் பற்றிய குறிப்புகள் 
பெயர்                 :           சு.செல்லப்பன் 
பிறந்த ஆண்டு     :           24.09.1928 
பிறப்பிடம்            :           சிவியாம்பாளையம், நாமக்கல் 
கல்வி                :            எம்.ஏ. (தமிழ்), பி.டி., பி,எல்., பிஎச்,டி.
தந்தையார்          :           சுப்பையன்
தாயார்               :           பழனியம்மாள்சிலம்பொலி
மனைவி             :           செல்லம் மாள் 
மகன்கள்            :           தொல்காப்பியன், கொங்குவேள் 
மகள்கள்            :           மணிமேகலை , கெளதமி, நகைமுத்து
 
இவர் சுமார் 25 அரிய தமிழ் நூல்கள் இயற்றியுள்ளார். சிலம்பொலி என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டினார்

விருதுகள்:

“அணிந்துரைச் செம்மல் விருது 2014”,
“பாவேந்தர் பைந்தமிழ் விருது 2017 “
 
செம்மொழித் தமிழைப் பரப்பும் வகையில் ஆற்றிய சிறப்பு பற்றிய விவரங்கள்
 
பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இளங்கோ இயற்றியருளிய சிலப்பதிகாரம் காப்பியம் இருபதாம் நூற்றாண்டில்தான் புலவர் மனைகளிலிருந்து வெளியேறிப் பொதுமக்களிடையே உலா வருகிறது. சிலப்பதிகாரம் என்றாலே இரண்டு சான்றோர்கள் பெயர் உடனே அனைவரின் நினைவுக்கு வரும். ஒருவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அடுத்தவர் சிலம்பொலி செல்லப்பன். கடந்த 60 ஆண்டுகளாகச் சிலப்பதிகாரத்தைப் பட்டிதொட்டியெல்லாம் அயராது அரும்பாடுபட்டுப் பரப்பி வருகிறார். 1953 ஆம் ஆண்டு இராசி புரம் இலக்கிய மன்ற விழாவில் சொல்லின் செல்வர் இரா.பி. சேது பிள்ளை அவர்கள் தலைமையில் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் செல்லப்பன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த அவர், “சிலம்பொலி” என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டினார். அப்போழுதுமுதல் சிலம்பொலிக்கும் திருப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
 
 
செம்மொழித் தமிழைப் பரப்பும் வகையில் ஆற்றிய சிறப்பு பற்றிய விவரங்கள்,
 
பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இளங்கோ இயற்றியருளிய சிலப்பதிகாரம் காப்பியம் இருபதாம் நூற்றாண்டில்தான் புலவர் மனைகளிலிருந்து வெளியேறிப் பொதுமக்களிடையே உலா வருகிறது. சிலப்பதிகாரம் என்றாலே இரண்டு சான்றோர்கள் பெயர் உடனே அனைவரின் நினைவுக்கு வரும். ஒருவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அடுத்தவர் சிலம்பொலி செல்லப்பன். கடந்த 60 ஆண்டுகளாகச் சிலப்பதிகாரத்தைப் பட்டிதொட்டியெல்லாம் அயராது அரும்பாடுபட்டுப் பரப்பி வருகிறார். 1953 ஆம் ஆண்டு இராசி புரம் இலக்கிய மன்ற விழாவில் சொல்லின் செல்வர் இரா.பி. சேது பிள்ளை அவர்கள் தலைமையில் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் செல்லப்பன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த அவர், சிலம்பொலி என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டினார். அப்போழுதுமுதல் சிலம்பொலிக்கும் திருப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
 

1975 ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் பற்றிய முழுமையான ஆய்வு நூலை எழுதி சிலம்பொலி என்ற தலைப்பில் வெளியிட்டார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் சிலம்பொலி நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில், கண்ணகி காப்பியம் தமிழினத்தின் தேசியச் சொத்து. இதை மக்கள் மத்தியில் பரப்ப அயராது பாடுபட்டுவரும் சிலம்பொலி செல்லப்போனாருக்கு என் வாழத்துக்கள். அன்பிலும் பண்பிலும் சிறந்தவராதலால் சிலம்பு பற்றிய இவரது பேச்சிலும், எழுத்திலும் அவை எதிரொலிக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.முத்தமிழ் அறிஞர் கலைஞர், அவர் நூலை வெளியிட்ட பிறகு சிலம்பொலி செல்லப்பனாக ஆனவர் அல்ல, அவர் சிலம்பொலி செல்லப்பனாகவே இருந்த காரணத்தால்தான் அவர் எழுதிய நூலுக்குச் சிலம்பொலி என்ற பெயர் வந்திருக்கிறது. இந்த நல்ல எழுத்தாளர், நல்ல ஆற்றலானார், நல்ல தமிழ் வல்லுநர் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.திருச்செங்கோடு நகரில் பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்குக் கண்ணகி விழா என இலக்கிய அங்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாய் விளங்கியவர் சிலம்பொலி செல்லப்பன் தான்.மணிமேகலை தெளிவுரை என்ற தலைப்பில்

இவ்வளவுக்கும் பெருமையுள்ளவர் உடல்நலக்குறைவால் இன்று நம்மை விட்டு நீங்கினார்.அவரது  மறைவுக்குப் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

மணிமேகலைக் காப்பியம் முழுமைக்கும் அடியொற்றி அருமையானதொரு தெளிவுரையை எழுதி வெளியிட்டுள்ளார். சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் மணிமேகலை என்ற தலைப்பில் 18 பொழிவுகள் 18 மாதங்கள் என்ற அளவில் மிகச் சிறந்த தொடர் சொற்பொழிவாற்றியதோடு, எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதி கருத்தரங்குகளிலும், இதழ்களிலும் படைத்துள்ளார்.ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி என்ற காப்பியத்தின் தலைப்பில், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையில் ஓர் ஆண்டுக் காலம் 15 பொழிவுகளாகத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியதோடு, இக் காப்பியத்தின் சிறப் பைப் பரப்ப அயராது பாடுபட்டு வருகிறார்.

 
1990 ஆம் ஆண்டு வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் சார்பில் பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி , நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை எனும் பத்துப்பாட்டு நூல்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் 18 பொழிவுகில் தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தி சாதனை படைத்தார். இத்தொடர் சொற்பொழிவுகளிலிருந்து பத்துப்பாட்டு பற்றிய பேச்சிகளைத் தொகுத்து சங்க இலக்கியத்தேன் என்ற தலைப்பில் மூன்று அரிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன . சிலம்பொலி செல்லப்பன் அலர்களின் உயிரோடு கலந்தது திருக்குறள். திருக்குறள் இடம் பெறாத சிலம்பொலி செல்லப்படின் சொற்பொழிவைக் கேட்பது அரிது கட்டுரையைக் காண்பது அரிது ஒருவர் எளிதாகப் புகழ் அடைய, திருக்குறள் இல்லற இயலில் உள்ள அதிகாரங்களை வரிசைப்படுத்தினாலே விடை கிடைத்துவிடும் எனக் கூருவார். மலர் நீட்டம் என்ற பெயரில் இவர் எழுதியுள்ள நூல் திருக்குறள் காட்டும் வாழ்க்கை நெறியை அறியப் பெரிதும் துணை செய்கிறது. நல்ல கட்டுரைகள், சுவைத்தற்குரிய நடை சிந்தனைக்குரிய செய்திகள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளத் துணை செய்யும் நல்லுரைகளை மலர் நீட்டம் தருகிறது என இந்நூலுக்கு அளித்துள்ள அருளுரையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.நாலடியார் மூலத்திற்கு இவர் எழுதியுள்ள விளக்கவுரை தமிழார்வலர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
செம்மொழி எண்பேராயக் குழுவில் உறுப்பினராய்ப் பணியாற்றியுள்ளார். 
 
உலகத் தமிழ் (ஆராய்ச்சி) மாநாட்டுப் பணிகள்!
*2ஆம் உலகத் தமிழ் மாநாடு – சென்னை
*5ஆம் உலகத் தமிழ் மாநாடு – மதுரை
*உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு – கோவை 3 மாநாட்டு ஆராய்ச்சி மலர்களும், சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் கைவண்ணமே!
 
வானொலியிலும், தொலைக்காட்சியிலும், திருக்குறள் , சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு , எட்டுத்தொகை, பதினென் கீழ்க்கணக்கு முதலான சங்க இலக்கிய நூல்கள் பற்றி எண்ணற்ற உரைகள் நிகழ்த்தி செம்மொழி பரப்பிட உழைத்தவர்.
இவ்வாறு செம்மொழித் தமிழைப் பரப்பும் வகையில் மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ஆற்றிய சிறப்புப் பங்களிப்பு பற்றி சிலவற்றை மட்டும் இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளது
 
“இவ்வளவுக்கும் பெருமையுள்ளவர் உடல்நலக்குறைவால் இன்று நம்மை விட்டு நீங்கினார்.அவரது  மறைவுக்குப் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது”.