

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கு புத்தாடை உடுத்தி புன்சிரிப்போடு பூரிப்படையும் நாள் இதோ!
வட அமெரிக்க வாழ் தமிழ் சிறார்களின் தமிழ்ப் பேச்சு பார் எங்கும் பறை இசை போல் ஒலித்து பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது கடந்த பல மாதங்களாக!
ஏறத்தாழ 100 தமிழ் அமைப்புகளின் வழியே தேர்ந்தெடுக்கப்பட்டு வட அமெரிக்காவில் 200 சிறார்களுடன் துவங்கிய இந்த “தமிழ் கூறும் தலைமுறை” முன்னெடுப்பு, பல கட்டங்களைத் தாண்டி, பல பயிற்சிகளைத் தாண்டி, பல போட்டிகளைத் தாண்டி, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது! ஆம், 200 முத்துக்களில் இருந்து மிகவும் கனத்த இதயத்துடன், அவர்களது பேச்சு திறனை கருத்தில் கொண்டு, 20 ஆகச் சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுத்துள்ளோம்!
இந்த இருபது முத்துக்களும் வட அமெரிக்காவின் தமிழ் தூதுவர்களாக எதிர்வரும் காலங்களில் திகழப் போகிறார்கள்!
இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள 20 முத்தான முத்துக்களுக்கும் பேரவையின் அன்பு முத்தங்களுடன் கூடிய வாழ்த்துக்கள்!! சிறகை விரித்து, சிகரம் தொடுங்கள்! இறுதிப் போட்டி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
நன்றி!
தமிழ்கூறும் தலைமுறை அணி
© 2022 FeTNA. All rights reserved. Powered by CDS.