தமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..

தமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு பொறியியல், அறிவியல் மற்றும் உயர் தொழிற்நுட்பம் படித்து வரும் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கவும் “யாதும் ஊரே” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக முதல்வர், தலைமை செயலர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னதாக அமெரிக்கா வந்திருந்தினர். தொழில் முனைவர்களாக இருக்கும் அமெரிக்க வாழ் தமிழர்களை, தமிழகத்தில் தொழிற் தொடங்க பல்வேறு அரசு உதவியுடன் அழைப்பது தான் இதன் முக்கிய நோக்கம். அமெரிக்காவில் நியுயார்க் மற்றும் சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதியில் இது தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தவும், தமிழக தொழிற் வளர்ச்சிக்கு மூல தனம் திரட்டவும் நடந்த நிகழ்ச்சிக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை American Tamil Entrepreneurs Association – ATEA Bay Area Tamil Manram New York Tamil Sangam மற்றும் பிற உறுப்பினர் தமிழ் சங்கங்கள் உடன் இணைந்து முயற்சி வெற்றி பெற உதவி செய்தது. இம்முயற்சியில் உதவி செய்த என்னற்ற தன்னார்வலர்களுக்கு பேரவை நன்றி தெரிவித்து கொள்கிறது. இந்த உதவிக்கு நன்றி தெரிவித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் அவர்கள் பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.